இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் – அநுரவிடம் மோடி வேண்டுகோள்

இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற அரச மரியாதையை தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி அலுலகத்திற்கு வருகை தந்தார்.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த இந்தியப் பிரதமருக்கு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததையடுத்து, இரு நாட்டுப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
பிரதமர் மோடிக்கு ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது வழங்கப்பட்டப்டி பின்னர் கருத்து வெளியிட்ட அவர்.
இந்திய பிரதமர் மோடி மேலும் தெரிவிக்கையில்,
மீனவர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.
அந்த வகையில் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் எனக் கோரிக்கை விடுத்தார்.