நிழலின் விம்பத்தில்…. கவிதை… நிவேதிகா இராசன்

யாருடன் நடக்கிறாய்?
யாருக்காய் நடப்பிக்கின்றாய்?….
சரியோ தவறோ
என்னுடன் தொடரும்
சாயலே……..
தேடுகிறேன்………..
விடியலிலும் சாயலிலும்
நோக்கின்றிய உன் நகர்வின்
முடிவுகளில்………….
ஏன் விம்பமாய் தொடர்கிறாய்?
மெய்மையின் வடிவமாய்
போலியின் எதிரியாய்
உறுதியின் அசைவாய்
ஊனத்தின் அடையாளமாய்….
தன்னம்பிக்கையின் தழுவலாய்
தாலாட்டின் சித்திரமாய்
உருவத்தின் பிரதியாய்
அருவத்தின் தன்மையாய்….
தேடுகிறேன்……………..
இரவிலும் நடுநிசியிலும்……
தேடுகிறேன்…
பொய்யும் இல்லை
பொருளும் மிகையில்லை….
ஆபரணமில்லை
ஆராதனை அதுவுமில்லை…..
கள்ளமில்லை
கபடம் தானதுவுமில்லை
வாக்குமில்லை
வாய் அதுவுமில்லை
தோன்றலில் வாயிலில்
சுடலை காத்தவனின்
புதல்வியானவளே
வரமான உன் சாயலில்
என் விம்பமாய்……………
துணையானவளே……….
சாலையில் விம்பம் காட்டிய நீ
சாரலில் மறைவதேனோ?
சருகினில் தெரிவதேனோ?
துணையின்றிய தனிமைகளில்
துணையாகிய விம்பமே
தூரமாய் நகர்ந்த போதும்
துச்சமாய் ஊர்கின்றாய்
யாரற்ற போதும் துணையென
நானுற்றிருப்பேன் எனும்
உச்சாடனத்தின் உறுதியே
என் விம்பம்……
விம்பத்தின் நாமமே,..
நிழல்……………………..
நிவேதிகா இராசன்
Wow nice