தமிழ்ச் சமூக மாந்தரும் சுயசரிதை எழுதலும்… ஏலையா க.முருகதாசன்

சுயசரிதை என்றால் என்ன என்பதில் தமிழ்ச் சமூகத்திற்கு அறிதல் இல்லையோ என கருத வேண்டியுள்ளது.
சுயசரிதை எழுதுகிறோம் எனச் சொல்வோரில் தனது சுயசரிதையை எழுதுபவராயினும் அல்லது மற்றவர்களின் வாழ்க்கையை அவர்கள் சொல்லச் சொல்ல குறிப்பெடுத்தோ ஒலிப்பதிவு செய்தோ எழுதுபவர்களாயினும், தாம் தமது வாழ்நாளில் என்ன செய்தோம் என்பதையும் தமக்குச் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதற்காகவும் அதை மற்றவர்கள் போற்ற வேண்டும் என்ற எண்ணத்திலேயே சிலர் எழுதியிருக்கிறார்கள்.அதற்குப் பெயர் வாழ்க்கை வரலாறாகும்,அது சுயசரிதை அல்ல.
ஆனால்,எனிnனும் வாழ்க்கை வரலாற்றை அக்கு வேறு ஆணிவேராகப் பகுதி பகுதியாக பகுத்துப் பார்க்குமிடத்தில் நாளாந்த வாழ்க்கையை ஒரு எல்லையாக வைத்துக் கொண்டு இந்த நேரத்தில் இருந்து இந்த நேரம் வரை ஒரு மனிதன் என்னவெல்லாம்.
பேசினான்,என்னவெல்லாம் செய்தான் அவன் யார் யாருடன் தொடர்பிலிருந்தான் அவர்களுடன் உண்மைத்தன்மையுடன் நடந்தானா என்பதையெல்லாம் ஒளிவு மறைவு இன்றி அவை பதிவு செய்யப்படுமானால் அது வாழ்க்கை வரலாறு என்பதைக் கடந்து சுயசரிதை என்ற நிலையை எட்டிவிடும்.
சுயசரிதை என்ற சொல்லானது அவரவர் செய்யும் நல்லது கெட்டது என அனைத்தையுமே உள்ளடக்கியதுதான்.குறிப்பாக ஐரோப்பியப் புலத்திலோ அன்றி தமிழ்ச் சமூகமற்ற,தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளங்களுக்கு முற்றிலும் வேறாக இருப்பவர்கள் துணிந்து அதனை எழுதுகிறார்கள்.
தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை ஒழுக்கம் சார்ந்த விடயத்தில் பெண்களின் கற்புத் தவறாமையை முன்னிலைப்படுத்தி அதன் மீது தமி;ழ்ச் சமூகத்iதை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
ஐரோப்பியபுலம்சார் மக்களின் வாழ்க்கை முறையில் பாலியல் விருப்பு என்பது சாதாரண விடயம்.அது அவர்களின் சமூகக் கட்டுமானத்தையோ வாழ்வியல் அலகுகளையோ தாங்கிப் பிடிப்பதும் இல்லை.
ஆனால் ஒரு பெண்ணை அவளின் விருப்பமில்லாமல் தொடவேகூடாது என்ற இறுக்கமான சட்டம் அவர்களிடமும் உண்டு.
1966 ஆண்டுக் காலத்தில் நான் மகாத்மா காந்தி எழுதிய அவரின் சுயசரிதையைச் சொல்லும் சத்திய சோதனை என்ற நூலை வாசித்த போது இப்படியும் ஒருவரால் வெளிப்படையாக எழுத முடியுமா என எனக்குள் பெரும் வியப்பே ஏற்பட்டது.
இயல்பான எழுத்து நடையில் எந்தவிதமான அலங்காரச் சொற்களுமில்லாமல் எந்தவிதமான பூசி மெழுகலும் இல்லாமல் அந்தச் சுயசரிதை எழுதப்பட்டிருந்தது.
தான் மக்களால் போற்றப்படும் ஒரு மனிதர் என்பதையோ தன்னை இந்தியர்கள் மட்டுமல்ல பிரித்தானியர் உட்பட அகில உலகமும் கவனித்துக் கொண்டிருக்கின்றது தனது வாழ்க்கைச் சம்பவங்களில் உள்ள அகம் புறம் அனைத்தையம் எழுhதினால் தனது பெயர் கெட்டுவிடுமே என்று அவர் நினைக்கவில்லை,தான் உண்மையாக இருக்க வேண்டும் எனது சுயசரிதையை வாசிக்கும் மக்கள் தன்னைப்பற்றி எந்த அபிப்பராயத்தையும் கொள்ளட்டும் என்று துணிந்து எழுதினார்.எனது தாயார் பக்கத்து அறையில் நோயுடன் போராடி இறப்பை அண்மித்துக் கொண்டிருக்கையில் நான் எனது அறையில் எனது மனைவியுடன் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன் என எழுதியதை வாசித்த போது எவ்வளவு உண்மையாக எழுதுகிறார் என வியப்பு ஏற்பட்டது.
அவரின் துணிச்சலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.அவரை மகாத்மா என்றனர்.பிரித்தானிய அரசு அவரின் அறப்போரின் வீச்சை பார்த்து அவருக்கு மரியாதை கொடுத்தது. இந்திய சுதந்திரத்துக்குப் பின்னர் அவர் கழுதிய அவரின் சுயசரிதையைப் பார்த்தும் அவரைப் போற்றியது.
அவரைப் போல வெளிப்படையாக எழுதும் துணிச்சல் தமிழ்ச் சமூக மாந்தர்களிடம் இருக்கின்றதாவென்றால் இல்லவே இல்லை.மனிதர்கள் எவரும் நூறு வீதம் ஒழுக்கமானவர்கள் அல்ல என்பதை உலகமே அங்கீகரித்துள்ளது.
நடிகரும் பிற்காலத்தில் தமிழகத்தின் முதலவராக இருந்த திரு.எம்.ஜி.ஆர்.அவர்கள் ஆனந்த விகடனில் நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் தனது சுயசரிதை என்று சொல்லி தான் சினிமா நடிகரானது,திமுகாவில் இணைந்தது பின்னர் திமுகாவிலிருந்து விலகி அதிமுகவைத் தோற்றுவித்தது போன்றவற்றை எழுதினாரே தவிர தன்னால் நலிந்து போன திரைப்படத் தயாரிப்பாளரகள்; பற்றியோ,மற்றைய நடிகர்கள் நடிக்க வேண்டிய திரைப்படங்களில் அவர்களை நடிக்கவிடாமல்: தடுத்து தான் நடித்து தனது சூழ்ச்சியை மறைத்து பணமும் பேரும் புகழும் பெற்றதை எழுதினாரே தவிர நான் மற்றைய நடிகர்களின் சந்தர்ப்பத்தைப்: பறித்தவன் என எழுதினாரா?.இவரால் சீரழிந்த நடிகைகளைப் பற்றி நான் இந்த நடிகைகளின் வாழ்வைச் சீரழித்த கொடியவன் என எழுதினாரா என்றால் இல்லவே இல்லை.
தனது தவறுகளையும் அவர் எழுதியிருந்தால் அவரின் சுயசரிதை போற்றத்தக்கதே.அவரின் வாரிவழங்கிய வள்ளல் தன்மை அவரின் இருண்ட பக்கங்களை வெளிப்படுத்தவில்லை.எம்.ஜி.ஆரைப் பற்றித் தெரிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கோர் தமிழகத்திலிருந்தும் துணிச்சலுடன் எவருமே; அவரின் தவறுகளைச் சுட்டிக் காட்டவில்லை.ஆங்காங்கே சுட்டிக்காட்டியவர்களின் வாய்கள் அடைக்கப்பட்டன.
மாணவர் பேரவையைச் சேர்ந்த திரு.புஸ்பராஜா தமிழகத்தில் இருந்த போது தானும் தனது அமைப்பும் விட்ட தவறுகளை ஆனந்தவிகடனில் வாக்குமூலம் என்ற பெயரில் எழுதிய போது இப்பொழுது எழுதுகிறவர் முன்பே எழுதியிருக்கலாமே திருந்தியிருக்கலாமே என்றும் சொல்லவே செய்தனர்.
இப்படிப் பார்க்கையில் நான் எழுதிய புல்லாந்தி,மகாஓயா ஆறும் காதலியும் சிங்கப்பூரில் சில காலம் என்ற கதைகள் அப்பட்டமாக உண்மையைச் சொன்ன கதைகள்.
சிங்கப்பூரில் சிலகாலம் என்ற கதை அக்கினிக்குஞ்சு இணையத்தளத்தில் வெளிவந்த போது அதன் ஆசிரியர் சொந்தப் பெயரில் எழுதுகிறீர்களே பிரச்சினை இல்லையா புனைபெயரில் எழுதுங்கள் எனக்கூடச் சொன்னார்.நான் அதற்கு மறுத்துவிட்டேன்.
சுயசரிதை என்று பெயர் வைத்து எழுத முனைகிறவர்கள் அல்லது ஒருவரிடம் அவரின் வாழ்நாள் சம்பவங்களைக் கேட்டு எழுதுபவர்கள்,தமது சுயசரிதையைக் கூறுபவரிடம் உண்மையைச் சொல்லுங்கள் எனக் கேள்விமேல் கேள்வி கேட்க வேண்டும்.
அதை விடுத்து முகாமையாளர் சொல்வதைக் குறிப்பெடுக்கும் அவரின் செயலாளராக இருத்தல்; எழுத்துத் துணிச்சல் அல்ல.ஒருவர் சொல்லி இன்னொருவர் எழுதுவது சுயசரிதை அல்ல அதற்குப் பெயர் அவரின் சாதனை விபரம் அல்லது வாழ்க்கை வரலாறாகும்.
எழுத்து,பாடல்,நடனம்,சிற்பம்,பத்திரிகை சஞ்சிகை ஊடகம்,விiயாட்டு,சமையல் ஆன்மீகம் என்பவற்றில் சாதனை படைத்தவர்களைப் பற்றி எழுதும் போது அதற்குப் பெயர் சாதனைச் சரித்திரம் என்பதேயாகும்.
ஒரு உதாரணமாக ஒருவர் ஆரம்ப காலத்தில் தனது குறிப்பிட்ட வயதுவரை மச்சம் மாமிசம் உண்பவராக இருந்து பிற்காலத்தில் அது பாவப்பட்ட செயல் என,
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத் துண்ணாமை நன்று
என்றோ
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
என்பதையோ உணர்ந்து,தன்னை ஒழுங்குபடுத்தி பிற்காலத்தில் மக்கள் மத்தியில் உயிர்களைக் கொலை செய்து ஊண் உண்ணுதல் பாவம் என ஒருவர் பிரச்சாரம் செய்கையில் அவர் சுயசரிதை எழுதும் எண்ணத்தைக் கொண்டவராயின் தான் முன்பு மச்சம் மாமிசம் சாப்பிட்டதையும் எழுதி இப்பொழுது அவை தவறு என்பதை உணர்ந்து திருந்திவிட்டேன் என்பதையும் தனது சுயசரிதையில் எழுத வேண்டும்.
தனது தொண்டினை மட்டுமே குறிப்பிடுவராயின் எனது தொண்டுகள் எனக் குறிப்பிட்டு எழுதுவதில் தவறு இல்லை.
ஒருவர் வேள்விகளில் கிடாய்களை வெட்டிக் கொன்று கொண்டிருந்தவர் பின்னாட்களில் அவர் செய்த பாவம் அவரை ஆட்டிப் படைக்க அவர் தான் செய்த தவறுகளை உணர்ந்து முற்றிலுமாக மரக்கறி உண்பவாhக மாறினாரெனில், அவர் தனது சுயசரிதையை எழுதும் எண்ணத்தைக் கொண்டிருந்தால் தான் கிடாய் வெட்டியதின் தவறை உணர்ந்ததையும் எழுத வேண்டும்.
மற்றவர்களின் பணத்தை மோசடி செய்து,மற்றவர்களின் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கி தன்னை உயர்த்துபவர் தானும் தன்னுடைய சுயசரிதையை எழுதுவரானால் நண்பர்களை ஏமாற்றியதை,கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக்கியதை எழுத வேண்டும.
தனது தொழில் வளர்ச்சியை மட்டுமே குறிப்பதானால் எனது தொழில் வரலாறு என்று எழுதுவதில் தவறு இல்லை.வாழ்க்கை வரலாறு என்பது வேறு சுயசரிதை என்பது வேறு.
சுயசரிதை (அவுற்றோபயோகிரபிக் ) எழுதும் துணிச்சல் தமிழர்கள் எவரிடமும் இல்லை.