கவிதைகள்
கனவு… கவிதை… நிவேதிகா இராசன்

விடிந்தால் கரைந்து செல்லும்
நிஐங்களிலும்…
கற்பனையின் மருங்கித் தவழும் திவலைகளிலும்…
நிஜமாகும் சிலவற்றுக்கும்
நிலையற்றுப் போகும் பலவற்றுக்கும் நடுவில்……
சிதறிய திவலையின் துளியில்
நீயும் அழகே…….
ஏழ்மையின் வெறியும்
வாழ்வின் தேடலும்
மனதின் புதையலும்
ஆகாசத்தின் உச்சியும்
என்றும் அழகே…….
உன் பெயரில்……
அடையாத வெற்றிகளும்
அலையாத பெருந்தெருவும்
சேராத காதலும்
சோராத செல்வமும்
என்றும் அழகே………
…….. எல்லையற்ற உன்னுருவில்………….
கனவே……….
நிவேதிகா இராசன்