முச்சந்தி

மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தை கொண்ட நாடாக இலங்கை மாறும்; அநுர உறுதி

எதிர்வரும் 4 ஆண்டுகளுக்குள் பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரக் கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

‘வெற்றி நிச்சயம் – கிராமம் நமதே’ எனும் தொனிப்பொருளில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நேற்று மித்தெனியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல கட்சிகளாகப் பிரிந்து போட்டியிடுகின்றனர். வெற்றிபெற்ற பின்னர் இணைந்து ஆட்சியமைக்கின்றனர். அவ்வாறெனின் எதற்காகப் பிரிந்து போட்டியிட வேண்டும்.

எவ்வாறு போட்டியிட்டாலும் இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சியமைக்கும்.

தேசிய மக்கள் சக்தி இந்த நாட்டை வங்குரோத்து நிலையில் மீட்டுவருவதுடன், எதிர்காலங்களில் முழுமையாக நாட்டை நாம் மீட்டெடுப்போம்.

இந்தியப் பிரதமரின் வருகையையடுத்து இலங்கைக்கு பாரியதொரு தொகை கிடைக்கப்பெறும்.

தனியார் நிறுவனம், காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து இலங்கை மின்சார சபைக்கு விற்பனை செய்யவுள்ளது.

குறைந்த விலையில் மின்சாரத்தைக் கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்தில் நாம் அண்மையில் கையெழுத்திட்டோம்.

தெற்காசியப் பிராந்தியத்தில் இன்னும் 3 அல்லது 4 வருடங்களில் குறைந்த மின்கட்டணத்தைக் கொண்ட நாடாக இலங்கை மாறும் எனத் தாம் உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button