பலதும் பத்தும்

பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம்

ஈரானில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை ஈரான் ராணுவம் சேமித்து வைத்துள்ளது.

இந்த ‘ஏவுகணை நகரம்’ தொடர்பான வீடியோவை ஈரான் அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம்; ஈரான் காணொளியால் உலகநாடுகள் அச்சம்! | Iran Video Shows Underground Missile City

85 வினாடிகள் கொண்ட வீடியோ

இந்த வீடியோ அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட ஈரானின் எதிரிகளாக கருதப்படும் நாடுகளுக்கு ஈரான் அரசாங்கம் வெளியிட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இது போன்ற ஏவுகணை நகரம் மற்றும் கடற்படை சுரங்கம் தொடர்பான வீடியோவை ஈரான் வெளியிட்டிருந்தது.

பூமிக்கு அடியில் ஏவுகணை நகரம்; ஈரான் காணொளியால் உலகநாடுகள் அச்சம்! | Iran Video Shows Underground Missile City

இந்நிலையில், ஈரான் அரசு தற்போது தங்கள் ராணுவ பலத்தை வெளிக்காட்டும் 85 வினாடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது.

இன்று தொடங்கினால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம் என்றும் ஈரான் கூறியுள்ளது.

 

இந்நிலையில் மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில், ஈரான் அரசு வெளியிட்டுள்ள வீடியோ மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button