முச்சந்தி

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

வவுனியா நகரில் அமைந்துள்ள வாடி வீட்டில் கட்சியின் வவுனியா மாவட்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சத்தியலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேச சபை என்பவற்றுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதில், கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், வேட்பாளர்கள், கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button