கவிதைகள்
அப்பாச்சி… கவிதை… முல்லைஅமுதன்

எங்கள் தெருவிற்கு
பாட்டனாரின் பெயர் இருந்ததாக
அப்பாச்சி சொல்லுவாள்.
மாறி மாறி வந்தவர்கள்
ஆட்சியாளர்கள் என மாற்றங்கள் செய்தனர்.
வருடாந்தம் பெருவிழாவாக கொண்டாடினர்.
சென்ற வருடம் தான்
மகிழினியின் அப்பாவின் பெயரை வைத்ததை
யாரும் எதிர்க்கவில்லை.
கண் சிமிட்டும் மகிழினியும்
தெருவின் பெயரைச் சொல்லியே
குட்டைப்பாவாடையுடன் துள்ளி ஓடுவாள்.
பிறகொரு நாள் ஊருக்குள் வந்த
அடையாளம் தெரியாத சப்பாத்துகள்
எங்கள் தெருவுடன்,
மகிழினியையும் சிதைத்துச் சென்றனர்.
இப்போது…
ஊர் வந்த ந்னிடம்
அக்காள் சொன்னாள்..
இந்தத் தெருவின் பெயர் மகிழினியென…
ஏன் அப்பெயர் வந்ததென
கேள்வி கேட்காமல்
தெருவெள்லாம் நடந்தேன்..
அவளின் நினைவுகளோடு..
முல்லைஅமுதன்
26/03/2025
மிகச் சிறப்பு. நெகிழ்ச்சி