கற்பனைக்குள் அடங்கா கவின்மிகு கவிதைகள்!… கவிதை – 02….. சங்கர சுப்பிரமணியன்.

கொழுத்தார் குறைமதி என்னே குடம்பாய்!
ஓவியமில்லா காவியம் இங்கு இல்லையா
கூவியே விற்காத பொருளும் இல்லையா
தாவிவந்தால் மட்டுமே மான் என்றறிவீரோ
காவிகட்டினால் மட்டுமே துறவியாவானா
அலைகள் அற்ற கடற்பகுதியும் உண்டாம்
சிலைகள் அற்ற தொழுமிடங்களும் உண்டு
நிலையென சொல்ல இங்கு எதுவுமில்லை
தலைசிறந்திட தன்மை ஒன்று போதுமாம்
ஆற்றிய கஞ்சி பழங்கஞ்சியாய் ஆவதும்
கூற்றுவன்வர இங்கு நாம் கூடியழுவதும்
வேற்றுலகு நடக்கும் விந்தையும் இல்லை
சோற்றுக்கற்வன் சுகப்படுவதும் இல்லை
ஆக்கலும் அழித்தலும் இயற்கையின் வழி
பாக்களும் பூக்களும் எவனோ வகுத்ததே
நீக்கமற நிறைந்திருக்கும் ஆக்கமறியார்
யாக்கை நிலையெனும் போக்கை விடார்
அழுக்கு துணியை அலசிட மறைந்திடும்
புழுக்கையும் உதவும் பூமியில் பயிர்வளர
தழுக்கிடும் மேனியை தக்க வைத்திடவும்
கொழுத்தார் குறைமதி என்னே குடம்பாய் !

-சங்கர சுப்பிரமணியன்.