இலங்கை

தமிழில் பட்டப்பின் டிப்ளோமா கற்றுத் தேர்ந்த பௌத்த துறவி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழில் பட்டப்பின் டிப்ளோமாவைப் பயின்று பௌத்த துறவி ஒருவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று, 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், முதலாவது அமர்வின் போது சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த துறவியே, உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, பட்டம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் சம்பிரதாய பூர்வமாக இவரது பட்டம் கையளிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *