பலதும் பத்தும்

அத்திப்பழத்தில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்!

அத்திப்பழம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்கக்கூடியது, குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கிறது.

ஒரு அத்திப்பழத்தில் சுமார் 30 கலோரிகள், 9 கிராம் கார்போஹைட்ரேட், 6 கிராம் இயற்கைச் சர்க்கரை, 1 கிராம் நார்ச்சத்து ஆகியவை காணப்படுகின்றன.

அத்திப்பழத்தில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்! | The Hidden Health Benefits Of Figs

ஆரோக்கிய நன்மைகள்

இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, இரும்புச்சத்து, நியாசின், போலேட், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.

அத்திப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மைகள் மற்றும் நார்ச்சத்து, இன்சுலின் சுரப்பை அதிகரித்து அதன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

அத்திப்பழத்தில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்! | The Hidden Health Benefits Of Figs

இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். 35 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமாக பார்க்கப்படுகிறது.

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மந்தமாக்கி, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்காமல் தடுக்கும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.

அத்திப்பழத்தில் ஒளிந்துள்ள ஆரோக்கிய நன்மைகள்! | The Hidden Health Benefits Of Figs

 

இதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.

அதுமட்டுமல்லாது சர்க்கரை நோயாளிகள் அத்திப்பழத்தை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம், ஏனெனில் இது அவர்களுக்கு பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்குகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button