இலங்கை

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் பேசும் ஊடகவியலாளர்களே அதிகம்!

கடந்த 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களில் தமிழ் பேசும் ஊடகவியலாளர்களே அதிகம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்யை தினம் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்த அவர் குறித்த விடயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்னவென்றும், கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் கடந்த கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இதனை ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்ட போதும் இந்த சம்பவங்கள் அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக இடம்பெற்றது எனக்கூறி அனைத்து விடயங்களும் மூடி மறைக்கப்பட்டிருந்தாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *