இலங்கை

தமிழரின் பூர்வீக வாழ்விடங்களை பௌத்த மயமாக்காதே; தையிட்டி விகாரைக்கு எதிராக வெடித்த போராட்டம்..!

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியும், சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்றையதினம்(12) மாலை ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டம் பௌர்ணமி தினமாகிய இன்றையதினம் மாலை 6 மணி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள், தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரையும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு தையிட்டி விகாரை காணி உரிமையாளர்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் இந்தப் போராட்டத்துக்கு பல கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளது.

அந்தவகையில் இன்றைய போராட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த பகுதியில் ஏராளமான பொலிஸாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *