தையிட்டி விகாரை இடிப்பா?; கஜேந்திரகுமாருக்கு நீதிமன்றம் அழைப்பு

யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரையை இடித்து அகற்ற சமூக வலைத்தளங்களில் துண்டுப்பிரசுரத்தை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நீதிமன்றத்தினால் அழைப்புக் கட்டளை விடுக்கப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் நாளை மறுதினம் 14 ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரை ஆஜராகுமாறு பலாலி பொலிஸாரால் அழைப்புக் கட்டளை கையளிக்கப்பட்டுள்ளது.
தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையை இடிக்க மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பெயரை குறிப்பிட்டு பரப்பப்பட்ட துண்டுப்பிரசுரம் தொடர்பாகவே பொலிஸார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது குற்றஞ்சாட்டி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேவேளை குறித்த துண்டுப்பிரசுரம் சமூக வலைத்தளங்களில் பரப்பபட்ட நிலையில் அது போலியானது என தெரிவித்து ஊடக சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெளிவுபடுத்தியதுடன் தனது சமூக வலைத்தளத்திலும் போலிச் செய்தி என குறிப்பிட்டு பகிர்ந்திருந்தார்.
![]()