இந்தியா

இந்திய பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் விஜயம்

செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் தலைமை தாங்குவதற்கு இந்திய பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார்.

பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை இந்திய பிரதமர் மோடி இன்று தொடங்கவுள்ளார்.

அரசுமுறைப் பயணமாக இன்று பிற்பகல் டெல்லியில் இருந்து புறப்பட்டு பிரான்ஸ் நாட்டுக்கு மோடி செல்லவுள்ளார்.

இன்று இரவு பிரான்ஸ் சென்றடையும் இந்திய பிரதமர், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

பின்னர், நாளை செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் குறித்த உச்சி மாநாட்டை ஜனாதிபதி மேக்ரானுடன் இணைந்து தலைமைதாங்கவுள்ளார்.

அதன் பின்னர், இருதரப்பு உறவுகள் குறித்து பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

நாளை மறுநாள் பிரான்ஸ் நாட்டின் மார்சேய் நகரில் இந்திய துணை தூதரகத்தை திறந்து வைக்கும் இந்திய பிரதமர் மோடி, அங்கிருந்து அமெரிக்காவுக்கு புறப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதிவியேற்ற பிறகு முதல் முறையாக அமெரிக்கா செல்லவுள்ள இந்திய பிரதமர் மோடி, வர்த்தகம், பாதுகாப்பு, இந்தியர்கள் நாடு கடத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பார் என கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *