இலங்கை

மகிந்த செல்லும் விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துமாறு எக்னலிகொட தெரிவித்தார்; நீதிமன்றத்தில் முன்னாள் புலி உறுப்பினர்

யுத்தக் காலத்தில் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்க முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவொன்றைப் படுகொலை செய்வதற்கான திட்டங்கள் குறித்து தாம் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளதாக, ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போனமை தொடர்பில் விச ரணை நடத்தி வரும் கொழும்பு மேல் நீ திமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில், முன்னாள்விடுதலைப் புலிகள் உறுப்பினரான சுமதிபால சுரேஷ் குமார் என்றழைக்கப்படும் தவேந்திரன் முரளி தெரிவித்துள்ளதாக ‘த ஐலன்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பில் விச
ரணை நடத்தி வரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினரான சுமதிபால சுரேஷ் குமார் என்றழைக்கப்படும் தவேந்திரன் முரளி இவ்வாறு கூறியுள்ளார்.
ஏ.ஜீ.யு.எஸ்.என். கே. செனவிரத்ன (தலைவர்), கலாநிதி நலின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வே இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் முதலாவது, இரண்டாவது மற்றும் ஆறாவது பிரதிவாதிகள் சார்பில் நான்காவது சாட்சி ஆஜராகி சாட்சியமளித்த போதே சுரேஷ் குமார் இதனைத் தெரிவித்தார்.

சனை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் ஏனைய உயர் அதிகாரிகள் பயணிக்கும் விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துமாறு எக்னலிகொட யோசன தெரிவித்தாகக் சுரேஷ்குமார் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு ஹபரணையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. அங்கு ‘நாதன்’ என அடைய அடையாளங் காணப்பட்ட மற்றொருவரும் இருந்ததாக அவர் கூறினார்.
எக்னலிகொடவைச் சந்தித்த காலத்தில் நீங்கள் எல்.டீ.டீ.ஈ புலனாய்வுப் பிரிவின் தலைவராகப் பணியாற்றினீர்களா என அரசுத் தரப்பு வழக்கறிஞர் வினவியபோது, தான் பாது, தான அந்த நேரத்தில் ஒரு கைதியாக இருந்ததாகக் குமார் கூறினார். தான் இராணுவத்துடன் செ ன்றதாகவும், அந்தச் சந்திப்பு நடந்த இடத்திற்குத் தான் சென்ற முதல் முறை அதுவென்றும் சாட்சி உரிமை கோரினார்.
அவர் கூறியது உண்மையல்ல என அரசுத் தரப்பு முன்வைத்த கூற்றை சுரேஷ்குமார் மறுத்தார்.

லெப்டினன்ட் கேணல் ஷம்மி அர்ஜுன் குமாரரத்ன உட்பட ஒன்பது இராணுவ அதிகாரிகளும் சிப்பாய்களுமே இந்த வழக்கின் பிரதிவாதிகளாவர். ஏனையோர் ஆர்.எம்.பி.கே. ராஜபக்ஷ என்றழைக்கப்படும் நாதன், டபிள்யூ.வி. பிரியந்த திலஞ்சன் உபாசேன என்றழைக்கப்படும் சுரேஷ் , செனவிரத்ன முதியான்சலாகே ரவீந்திர ரூபசேன என்றழைக்கப்படும் ரஞ்சி, யாப்பா முதியான்சலாகே சமிந்த குமார அபேரத்ன, செ னவிரத்ன முதியான்சலாகே கனிஷ்க குணரத்ன, அய்யாசாமி பாலசுப்பிரமணியம், தங்கஹ கமராலகே தரங்க பிரசாத் கமகே மற்றும் டீ.ஈ.ஆர்.பீரிஸ் ஆகியோராவர்.

நான்காவது சாட்சி 2009 மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்திருந்தார். மேலும், விசாரணைகளின் போது, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எக்னலிகொடவின் நோக்கத்தைக் கண்டறியும் முயற்சியாக அவருடன் தொடர்பு கொள்வதற்காக இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் பயன்படுத்தப்பட்டது தெரியவந்ததாகவும் ‘த ஐலன்ட்’ தெரிவித்துள்ளது.

2010 ஜனவரி26 அன்று நடைபெற்றஜனாதிபதித் தேர்தலுக்குச் சற்று முன்னரானகாலப்பகுதியில் எக்னலிகொட காணாமல் போயிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *