19 ஈரானிய கப்பல்களுக்கும் இலங்கை உதவ வேண்டும்; ஜனாதிபதிக்கு தேசிய ஷூரா சபை கடிதம்

இலங்கையின் பொருளாதார மண்டலத்திற்குள் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களில் உள்ள இந்தியா, பங்களாதேஷ் , ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாலுமிகள் மற்றும் தொழிலாளர்கள் உணவு, குடிநீர் மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் தவித்து வருவோருக்கு அவசரமான அதிகாரபூர்வ மனிதநேய உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தேசிய ஷூரா சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இலங்கையில் உள்ள 14 தேசிய அளவிலான முஸ்லிம் அமைப்புகளை உள்ளடக்கிய தேசிய ஷூரா சபை அனுப்பியுள்ள கடிதத்தில் பிராந்தியக் கடற்பரப்பு என்பது இறையாண்மையைச் செயற்படுத்துவதற்கான ஒரு எல்லையே தவிர, மனிதநேய உதவியைக் கட்டுப்படுத்தும் எல்லை அல்ல என்ற மனிதநேயக் கொள்கையைக்கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் ( காலிக்குத் தெற்கேசிக்கியுள்ள ஈரானியக் கப்பல்கள், நம்பகமான தகவல்களின்படி, கடுமையான குடிநீர்,உணவு மற்றும் மருந்துப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவற்றுக்கு
உத்தியோகபூர்வ அரசாங்க தேடல் மற்றும் மீட்புப் பணிகளும் சாத்தியமான மருத்துவ உதவியும் தேவைப்படுவதாகவும் இக்கப்பல்களில்ஈரான், இந்தியா, வங்காளதேசம் மற்றும் பல அயல் நாடுகளைச் சேர்ந்த சிவிலியன்மாலுமிகளும் தொழிலாளிகளும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தக் கப்பல்கள் 12 கடல் மைல் பிராந்தியக் கடற்பரப்புக்கு அப்பால் இருக்கும் வரைஎந்தவொரு பொருட்களும் வழங்கப்படாது என்ற நிலையைக் குறித்து நாங்கள்கடுமையான மனிதநேயக் கவலை அடைகிறோம். அடிப்படைப் பொருட்களைஉத்தியோகபூர்வமாக விநியோகிக்க இலங்கை கப்பல் முகவர்கள், கப்பல் வழங்குநர்கள்
அல்லது தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கவோ அல்லது வசதிகளிகவோ அரசாங்கம் எந்த முயற்சியும்
எடுக்கவில்லை.எனவே மிகுந்த மரியாதையுடன், சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கையின்கடமைகளுக்கோ அல்லது நமது நாட்டின் மனிதநேய மரபுகளுக்கோ இந்த நிலைப்பாடு முரணானது என்பதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம் எனவே, மாலுமிகள் மற்றும்தொழிலாளர்களுக்கு உடனடி உத்தியோகபூர்வ உதவியை வழங்கும்படி கோருகின்றோம் எனவும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது
இக் கடிதத்தில், தேசிய ஷூரா சபை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமானஎம்.எம். ஸுஹைர் மற்றும் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான ரஷீத் எம்.இம்தியாஸ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். மேலும் இக்கடிதத்தின் நகல்கள் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், இலங்கையின் மனித உரிமைகள் ஆணையகம், பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இலங்கை கடற்படைத் தளபதி ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
![]()