இலங்கை

பேச்சுக்களில் ஹரினை ரணில் இறக்கியது ஏன்?

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவதை தவிர்க்கும் வகையில் ஐக்கிய தேசியக்கட்சி செயற்படுவதாகவும் இந்த திட்டத்தை செயல்படுத்தவே ஹரின் பெர்னாண்டோவை ரணில் விக்ரமசிங்க களமிறக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை தனிக்கட்சியாக போட்டியிடாமல் செய்வதும் இருக்கட்சிகளின் தலைமையை ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைப்பதே முக்கிய நோக்கமாக இருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால், ரணிலுடன் ஒப்பந்தங்கள் செய்யாத, ரணிலிடமிருந்து பணம் வாங்காத, ரணிலின் நிகழ்ச்சி நிரலில் ஈடுபடாத நபர் ஐக்கிய மக்கள் சக்திக்குள் போதுமான அளவுக்கு இருந்தபோதிலும், இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்காக ஐக்கிய தேசியக் கட்சியால் நியமிக்கப்பட்ட ஹரின் பெர்னாண்டோ இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளானவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் இறுதிக் கலந்துரையாடல் கடந்த வாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணவின் வீட்டில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல்களில் ஐக்கிய தேசியக் கட்சியால் பரிந்துரைக்கப்பட்ட குழுவும், ஐக்கிய மக்கள் சக்தியால் பரிந்துரைக்கப்பட்ட குழுவும் கலந்து கொண்ட போதிலும், கலந்துரையாடலுக்குப் பரிந்துரைக்கப்படாத ஒரு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கலந்து கொண்டமை அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையில் இருந்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நீக்கப்பட்ட அவர், கடந்த தேர்தல்களில் கட்சியையும் கட்சித் தலைவர் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களையும் கடுமையாக தாக்கி செயற்பட்ட நிலைமையில் தற்போது கட்சி பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரணிலின் அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகித்து, நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதாகக் கூறி ஹரின் மில்லியன் கணக்கான ரூபாயை தவறாகப் பயன்படுத்தியதாகவும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தற்போது தேசியக் கட்சியின் அமைச்சர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஹரின் பெர்னாண்டோவுக்கு கலந்துரையாடலில் கலந்து கொண்டமைக்கு எவ்வித எதிர்ப்பும் வெளியிடப்படவில்லை எனவும் இதனால் அவர், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *