முச்சந்தி

2025 க்கான பட்ஜெட்டில் மூலதன செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபா

2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது இது அண்மைக் காலத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒருஅரசாங்கம் செலவிடும் மிகப்பெரிய தொகை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் பொருளாதார நிலைமாற்றம் என்ற தொனிப்பொருளில் இலங்கை வர்த்தக சபை ஏற்பாட்டில் நடைபெற்ற 2025 பொருளாதார உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

அண்மைக் காலத்தில் அரசாங்கமொன்றினால் மூலதனச் செலவுக்காக ஒதுக்கிய பாரியதொகை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும்.முதலீட்டாளர்களுக்கு வசதியளிக்க அரசாங்கம் பல முடிவுகளை எடுத்துள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் ஒரு மாற்றத்திற்கு இலங்கையை தயார்படுத்தவுள்ளோம் மக்களின் மனப்பான்மைகளை மாற்றாமல் ஒரு நாடாக நாம் முன்னேற முடியாது.

பொருளாதார மூலங்களையும் வாய்ப்புகளையும் கிராமத்திற்கு அறிமுகப்படுத்தப்படவேண்டும். தனிநபர்களைக் குறிவைத்து உதவி வழங்குவதற்குப் பதிலாக, சமூக வலுவூட்டல் முறைமையை உருவாக்கவுள்ளோம்.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா நாளாந்த சம்பளம் வழங்கத் தவறும் நிறுவனங்கள், வெற்றிகரமானவையா இல்லையா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது இது அண்மைக் காலத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒருஅரசாங்கம் செலவிடும் மிகப்பெரிய தொகையாகும். 2025 ஆம் ஆண்டில் சகலவித பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு 4வீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.