கதைகள்

“ஆகாயப்பந்தல்”… கதை -06 … ஏலையா க.முருகதாசன்

உயர உயரப் பறந்து போன பறவையைப் பற்றியே மதுசா வியந்தபடியே இருந்தாள்.தான் சந்தித்த இவர்களின் தன்மையல்லாத பலபேர் சந்திப்புகளில் வளவளாவென்று கதைப்பார்கள் ஆனால் இவர்கள் அளவாகப் பேசுகிறார்கள்,அழகாகச் சிரிக்கிறார்கள் என அவள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

இவர்கள் தன்னைப் பார்த்துப் பேசும் போது அவர்களின் இதழ்களும் அப்பப்ப மின்னிமறையும் அவர்களின் பற்களும் அழகாகத் தெரிந்தன.

சொல்லும் வார்த்தைகளின் உச்சரிப்பு கவர்ச்சியாகவும் கேட்க செவிக்குச் சுவையாகவும் இருந்தன.

பொதுவாக தமிழர்கள் தம்மொழியை கதைக்கும் போது வார்த்தைகளை உச்சரிக்கும் விதமும்,உச்சரிக்கும் வார்த்தைகளுக்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் நேரமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கும்.

ஊருக்கு ஊர் இடத்துக்கு இடம் உச்சரிப்பு முறை வித்தியாசப்படுவதும் உண்டு.
சரவணனும்,சாரிணியும் ஒரு புதிய மொழியைக் கண்டுபிடிச்சுக் கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் அவர்கள் தம்மையும் மறந்து அந்தப் புதிய மொழியை கதைக்கும் போது பயன்படுத்தகிறார்கள் என்று சரவணின் தாயும் தகப்பனும் சொன்ன போதும்,தான் பழகும் தமிழர்கள் கதைக்கும் போது அவர்களின் உச்சரிப்புத் தொனி போலில்லாது இவர்கள் தமிழை உச்சரிப்பது ஒரு மனசைக் கொள்ளை கொள்ளும் புதிய தொனியாக இருப்பதை உணர்ந்தாள்.
தான்,தன்னுடன் படிக்கும் மாணவனின் குடும்பத்துடனிருந்தாலும் அவள் வேறொரு உலகத்திலிருப்பது போல உணர்ந்தாள்.

குடும்பத்திலுள்ளவர்கள் தன்னை வரவேற்ற விதம்,கதைச்ச விதம் சிரித்த விதம் எல்லாமே புதுசாக இருந்தன.

பல நிறங்களால் மாறிக் கொண்டிருந்த அந்தப் பறவை திடீரென இறக்கைகளை ஓடுக்கிக் கொண்டு மேல் நோக்கிப் பறந்து முகில்களுக்கப்பாலும் சென்று கொண்டிருந்ததைப் பார்த்த மதுசா விட்டகலக முடியாத ஒரு ஈர்ப்புக்குள் தானிருக்கிறன் என்பதைச் சுகமானதாகக் கருதினாள்.

அவளின் சிந்தனையைக் குலைக்கும் விதமாக இந்தாங்க அண்ணி என்று சாரிணி தோடம்பழம் தேசிக்காய் அன்னாசிப்பழத் துண்டுகள்,பேரீச்சம்பழத் துண்டுகள்,கஸ்கொட்டைத் துண்டுகள் என தண்ணீரில் கலந்த அந்த யூசைக்: குடுத்ததும் அதை வாங்கிக் கொண்டே அதன் வாசனையை நுகர்ந்தவள் அதைப்பற்றிப் பேசுவதற்கு நாக்கை உண்ணியவளுக்கு தன்னை ஏன் சாரிணி அண்ணி என்று கூப்பிட்டவள் என அறிய ஆவல்பட்டு நீங்கள் இப்ப என்னை என்னென்று சொல்லிக் கூப்பிட்டனீங்கள் என்று கேட்க,சாரிணியும் எந்தப்ப பதட்டமுமில்லாமல் அண்ணி என்று கூப்பிட்டனான் என்றவள் மதுசா அடுத்த கேள்வி கேட்க முந்தியே அப்படித்தான் கூப்பிடச் சொல்லி என்ரை மனசு சொல்லிச்சுது கூப்பிட்டனான் என்ற சாரிணியை ஏற இறங்கப் பார்த்த மதுசா எந்தப் பதிலுமே சொல்லாது மௌனமானாள்.

மதுசா விரும்பியோ விரும்பாமளோ சரவணன் குடும்பத்தினரால் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருறந்தாள்.அவர்களை விட்டிட்டு விலத்தியிருக்க வேண்டும் என்று அவளின்: மனம் அவ்வப்போது சொன்னாலும் அவளால் அது முடியவில்லை.

இவர்கள் யார்?.தான் சந்தித்த,சந்தித்துக் கொண்டிருக்கின்ற மனிதர்கள் போலல்லாது இவர்கள் உருவத்தில் மனிதர்களாக இருந்தாலும் குணத்திலும் தன்னோடு பேசும் விதத்திலும் அணுகும் விதத்திலும் முற்றிலும் வித்தியாசமானவர்களாக இருக்கின்றார்களே.

அவர்கள் சிரிக்கும் போது அந்தச் சிரிப்பில் ஒரு கவர்ச்சி தென்படுகிறது.இன்றுதான் முதன்முதலாக இவர்களைச் சந்திக்கிறன்.சரவணனை யூனிவேர்சிற்றியில் பலமுறை சந்தித்திருநந்த போதிலும் அவனைக்கூட அருகாமையில் அதுவும் அவனின் உடலிலிருந்து ஒருவித வெப்பக்காற்று தனது உடலைத் தொட்டுச் செல்லும் தூரத்தில் இன்றுதான் நெருக்கமாகச் சந்திக்கிறானள்.

அவனின் தங்கை சாரிணியையும்,பெற்றோரையும் இன்றுதான் முதன்முதலாகச் சந்தித்த அவள் தான் சந்தித்த குடும்பங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறாள்.

ஒருவரின் வீட்டுக்கு ஏதேவது தேவை கருதிப் போகும் போதும் அல்லது அவர்கள் தம்மை விருந்துபசாரத்திற்காகக் கூப்பிடும் போதும் ஒவ்வொரு குடும்பத்தினரின்: பழக்க வழக்கங்களும் அவர்கள் தம்மோடு பழகும் விதமும் வித்தியாசமாக இருப்பதை தான் அவதானித்ததை இவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தாள் மதுசா.

தனது தாயார் உளவியல் பட்டதாரியாகவிருப்பதால் தனிமனித உளவியல், சமூகத்தின் உளவியல,;: இனம்சார் உளவியல் போன்றவற்றின் வித்தியாசங்களை ஒப்பிடு செய்து அவ்வப்பொழுது மகளுக்குச் சொல்லி வருவதுண்டு.

மதுசாவின் தாயார் உளவியல்:துறையில் விசேட கற்கைநெறியில் படித்துப:; பட்டம் பெற்றவள்.அதனால் மனிதர்களின் நுண்தன்மை பற்றி அவள் மிகத் தெளிவாக கற்றுணர்ந்து வைச்சிருந்தாள்.

இலங்கை மக்களில் சிங்களவர்கள்,தமிழர்கள்,முஸ்லீம்கள் என எல்லோருடைய தனிமனித உளவியல்,சமூக உளவியல்,இன உளவியல் என்பவற்றை அவள் தகது மகளுக்கு அப்பப்ப சொல்லி வருபவள்.

தமிழருக்குள்ளேயே ஊர் ரீதியாகவும்,மாகாண ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் பண்பியல் வேறுபாடு இருப்பதை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் மகளுடன் கலந்துரையாடத் தவறுவது இல்லை.

மகளின் நடத்தையைத் தாயார் எக்ஸ்ரே கண் கொண்டு பார்த்தாள்.தயாருக்கு பிடித்த தத்துவஞானிகளில் மிகவும் பிடித்தவராக முதலாவது இடத்தில் இருந்தவர் கிரேக்க தத்துவ ஞானியான சாக்கிரட்டீஸே.

தாயார் அடிக்கடி மகளிடம் இவ்வாறு சொல்வார்,யாழ்குடாநாட்டில் ஏதோ ஒரு ஊரில் பலதலைமுறைகளாக வாழும் பரம்பரையிலிருந்து ஒரு குடும்பம் பத்து ஆண்டுகள்: கொழும்பில் வாழ்ந்தாலே அவர்களின் பழக்கவழக்கங்களும் உளவியல் போக்கிலும்,சிங்கள முஸ்லீம்களுடன் பழகி வருவதாலும் அவர்களிடம் பண்பியல் கூறுகளில் பல மாற்றங்கள் தென்படும் எனத் தாயார் சொல்லியதை ஒரிரு விநாடிகளில் நினைவுபடுத்திக் கொண்டாள்.
தாயார் சொன்னவற்றை நினைவுபடுத்திக் கொண்டவள் மனசில் முற்றிலும் வேறாக இவர்களின் சிரிப்பு, கதைக்கும் விதம் இடைக்கிடை சாரிணியும் சரவணனும் உருவாக்கிக் கொண்டிருக்கும் புதுமொழி கலந்து கதைக்கிறது என எல்லாமே அவளுக்கு புது அனுபவமாக இருந்தது.

ஒருவர் தானிருக்கும் சூழ்நிலையை மறந்து நிலைகுத்தி நிற்கும் பார்வையும்,நிலைகுத்தி நிற்கும் சிந்தனையும் ஒருவரை பூமியிலிருந்து நகர்த்துவது போலவிருக்கும்.

அது போலத்தான் அவளும் நினைவலைத் தூக்கலில் எதையுமே திட்டவட்டமாக தீர்மானிக்க முடியாதவளாக மதுசா திண்டாடினாலும் அவர்களை விட்டு அவளால் மனசலவில்கூட விலக முடியவில்லை.

அவர்களுடன் இருப்பதை அவள் மனம் விரும்பியது.சரவணன் யூனிவேர்;சிற்றியில் படிக்கும் சக மாணவன்,ஒரு நண்பன் என்பதற்கப்பால் அவன் எனக்குரியவனா எனக்காகவென்று பிறந்தவனா என மதுசாவின் மனம் அலைபாய்ந்தது.

மதுசா நினைப்பிற்குள் ஆழ்ந்து ஆழ்ந்து போய்க் கொண்டிருந்தாள்.அப்பொழுது அண்ணி என்ன கிளாசைக் கையிலை வைச்சுக் கொண்டு எதையோ யோசிச்சுக் கொண்டிருக்கிறீர்கள் என்ற சாரிணியின் குரலைக் கேட்டு சுயநினைவுக்கு வந்த மதுசா தன்னை இரண்டாவது முறையாகவும் சாரிணி, அண்ணி என்று கூப்பிட்டதை அவள் விரும்பியதை அவளின் கன்னங்கள் சிவந்து காட்டிக் கொடுத்தன.

என்ன அண்ணி நான் அண்ணி என்று கூப்பிட்டதும் உங்கடை கன்னங்கள் ஜம்புப்பழம் மாதிரி சிவக்கின்றதே ம் அங்கை போய் இங்கை போய் எங்கையோ போயிட்டீங்கள் என்று சொல்லிக் கொண்டே மதுசாவின் கன்னத்தைச் சாரிணி மெதுவாகக் கிள்ளியதும,; மதுசா இனிய மின்சாரம் ஊடுருவியது போல சிலிர்க்கிறாள்.

தங்கச்சியார் கரைச்சுக் குடுத்த பழச்சாறைக் குடிச்சபடியே சாரிணியும் மதுசாவும் கதைப்பதை உள்வாங்கிக் கொண்டிருந்தான் சரவணன்.

சாரிணி குடுத்த பழரசத்தில் ஒரு மிடறு குடிச்ச மதுசா இதை எப்படிச் செய்தனீங்கள் என்று ஆவலுடன் கேட்கிறாள்.

(தொடரும்..)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *