தலைவர் தலைவராகவே இருப்பார் – கூட்டத்தில் இருந்து வெளியேறிய சிவமோகன் ஆவேசம்

தலைவரை நீக்கும் அதிகாரம் மத்திய குழுவில் இல்லை. தலைவர் தலைவராக இருப்பார் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சி. சிவமோகன் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இருந்து இடைநடுவில் வெளிநடப்பு செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

எப்போதும் எமது கட்சித் தீர்மானங்களை எடுக்கும்போது அனைவரையும் சாப்பாட்டுக்கு செல்லுமாறு தெரிவித்துவிட்டு எடுப்பது வழமை. அதே நிலைமை தான் இடம்பெற்றது.

இவ்வாறு தான் தேர்தல் நியமனக்குழுவுக்கும் இடம்பெற்றிருந்தது.

தற்போதைய செயலாளர் இருக்கும்போதுதான் இந்தக் கட்சியில் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

தலைவரை நீக்கும் அதிகாரம் இந்த மத்திய குழுவில் எவருக்குமே இல்லை. அதனை நான் நேரடியாக மத்திய குழுவுக்கு தெரிவித்துவிட்டு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறேன்.

என்னுடைய நோக்கம் இந்த கட்சியை சீராக்குவது தான்.

வழக்குகளை பின்வாங்குவதாக சுமந்திரன் வாக்குறுதி வழங்கி இருக்கிறார். அவரால் சாட்டப்பட்டவர்கள் தான் இந்த வழக்குகளை பதிவிட்டார்கள் என்பதற்கு இது ஒரு சாட்சி.

ஆகவே, அவரும் அந்த வழக்குகளில் பின்வாங்கினால் நானும் எனது வழக்குகளில் பின்வாங்கி பொதுச் சபை கூட்டத்துக்கு செல்வதற்கு தயாராகத்தான் இருக்கிறேன்.

தலைவரை தலைவர் பதவியில் இருந்து நீக்கவே முடியாது. நாங்கள் கேட்டுக்கொண்டது தலைவர் தலைவராகவே இருக்க பதில் தலைவர் கூட்டங்களை நடத்துமாறுதான். ஆனால், அவர்கள் மாறுபட்ட செய்தியை வெளியிடுகிறார்கள். தலைவர் தலைவராகவே இருப்பார் என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *