செய்திகள்

பாராளுமன்றம் செல்ல முன் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி; சத்தியப்பிரமாணமும் செய்த கஜேந்திரகுமார்

மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முள்ளிவாய்க்காலில் நேற்று செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட கஜேந்திரகுமார் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

இந்நிலையில் நேற்றுக் காலை முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்குச் சென்ற கஜேந்திரகுமார்

நினைவுத் தூபியில் பொதுச்சுடரேற்றி மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்

இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *