ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

இதுவரை வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றில் 123 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தற்போது 6,842,223 வாக்குகளுடன் 123 பாராளுமன்ற ஆசனங்களை வென்றுள்ளது.

இதேவேளை, ஐக்கிய மக்கள் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகூடிய ஆசனங்களைப் பெற்றுள்ளதுடன், அவர்கள் பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை 31 ஆகும்.

அத்தோடு, 06 ஆசனங்களைக் கைப்பற்றி பாராளுமன்றத்தில் மூன்றாவது இடத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி வென்றுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *