தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவானது!
கொழும்பு மாவட்டத்தில் மூவின மக்களை ஒருங்கிணைத்து வேட்பாளர்களை களமிறக்குவதாக உள்ள செயல்பாடு, எங்கள் கட்சியின் அரசியல் நடைமுறைக்கு அங்கீகாரம் பெற்றுள்ளது என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மக்களை நான் சரியான பாதையை நோக்கியும் அதற்கான வழிமுறையையுமே வழங்கி வருகின்றேன். அதனால்தான் எனது அனுபவமும் தூரநோக்குள்ள சிந்தனையும் இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாது மக்கள் என்னை தொடர்ந்தும் பாராளுமன்றத்திற்கு அனுப்பி வருகின்றார்கள்.
இதேநேரம் ஈபிடிபியின் தேசிய நல்லிணக்கத்திற்கு வலுச் சேர்கும் முகமாகவும் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற எமது கொள்கையை வலும்படுத்தும் முகமாகவும் இது அமைகின்றது. அத்துடன் ஈ.பி.டிபியின் தேசிய நல்லிணக்கம் எப்போதும் வலுவானது என்பதையும் இது உறுதிசெய்துள்ளது.
இதேவேளை தற்போது மாற்றம் என்ற விடையத்தை மையப்படுத்தியே அநேகமானோர் பரப்புரைகள் செய்கின்றனர். குறிப்பாக மாற்றம் என்பது அரசியல் மாற்றமாகவே இருக்கின்றது. அந்த மாற்றம் தற்போது மத்தியில் ஏற்படுள்ளது.
மேலும் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் யதார்த்த அரசியலையும், ஈ.பி.டி.பி. கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருக்கின்ற நியாயத்தினையும் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். இதனால்தான் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களிலும் எம்மை தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர். அதுமட்டுமல்லாது நாட்டில் நல்லதொரு சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது மக்களின் கோரிக்கைகளின் வெளிப்பாடாகவே எமது கொழும்பிலும் போட்டியிட வைத்துள்ளது.
மேலும், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் கொள்கைக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அரசியல் கொள்கைக்கும் இடையில் ஒற்றுமை உள்ளது. அவர்களும் இடதுசாரிக் கொள்கை உடையவர்கள் நாங்களும் இடதுசாரிக் கொள்கையை உடையவர்கள்.
அதேபோன்று ஒரு ஆயுதப் போராட்டத்தின் பின்னணியில் இருந்து ஜனநாயகத்துக்கு அவர்களைப் போன்று நாங்களும் அவ்வாறே வந்தவர்கள். கடந்த பாராளுமன்றத்தில் அவர்கள் பெற்றிருந்த பாராளுமன்ற ஆசனங்கள் மூன்று ஈ.பிடி.பி கொண்டிருந்தது இரண்டு.
இம்முறை மத்தியில் அவர்களூடாக மக்கள் அரசியல் மாற்றதை கொண்டுவந்துள்ளார்கள். அதேபோன்று தமிழ் மக்களும் ஈ.பிடி.பி ஊடாக அந்த மாற்றத்தை கொண்டுவருவார்கள் என நம்புகின்றேன்.
இதேநேரம் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர், மத்தியுடன் இணைந்து ஆட்சியில் பங்குபற்றுவது தொடர்பில் தீர்மானிப்போம்.
அத்துன் ஈபிடிபி யதார்த்தமான கொள்கையை முன்வைத்து அதனை அடைவதற்கான வேலைத்திட்டங்களை நீண்டகாலமாக முன்னெடுத்து வருகின்றது. இன்றும் அதை நோக்கியே செயற்பட்டு வருகின்றது.
இதேவேளை கடந்த காலங்களில் ஈபிடிபிக்கு பேரம்பேசும் சக்தியாக போதிய ஆசனங்களை மக்கள் வழங்கியிருக்கவில்லை. போதிய ஆசனங்கள் இருக்குமாக இருந்தால் மக்களுடைய அபிவிருத்திக்கான, அரசியல் உரிமைக்கான தீர்வு என மூன்று வகையான பிரச்சினைகளையும் எம்மால் தீர்க்க முடியும். அந்த வகையில் இம்முறை மக்கள் மத்தியில் உருவாகியுள்ள அரசியல் மாற்றம் ஈபிடிபியின் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்தும் என தெரிவித்தார்.