தொடரும் அவலம் மேய்ச்சல் கால்நடைகளுக்கு துப்பாக்கி வேட்டு !
மன்னார் உயிலங்குளத்தின் அலைகரைப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள் கொல்லப்படுவதால், கால்நடை வளர்ப்போர் பாரிய இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்த போதும், இதுவரை அவற்றை தடுப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
வாழ்வாதரமாக கால்நடைகளை வளர்க்கும் சூழலில், அவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியாத நிலை தொடர்ந்து வருவது ஒன்றுக்கொன்று முரணான நிலைகளாக சமூகவியலாளர்களால் நோக்கப்படுகிறது.
இடியன் துப்பாக்கியை பயன்படுத்தி மாடுகளை வேட்டையாடிச் சாப்பிடும் சிலராலேயே, இந்த அவல நிலை தொடர்வதாக சுட்டிக்காட்டப்படுகிறது. தேறாங்கண்டலைச் சேர்ந்த ஒரு சில நபர்கள், இவ்வாறு கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து அவற்றை கொன்று உணவுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட கால்நடை வளர்ப்போரால், மல்லாவி பொலிஸ் நிலையத்தில் பல தடவைகள் முறைப்பாடு செயப்பட்டுள்ளது.
ஆயினும், இதுவரை உரிய நடவடிக்கைகள் மூலம் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவில்லை என, உயிலங்குளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சுட்டிக்காட்டுகின்றார். வன்னியில், பரவலாக எல்லா இடங்களிலும் கால்நடைத் திருட்டு நடைபெற்று வகிறது.அவற்றை தடுப்பதற்கு இதுவரை நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படாதது கவலைக்குரிய விடயமாகும்.