சட்டவிரோதமாக சேர்த்த சொத்துகள் பறிமுதல் செய்ய புதிய நிறுவனம்; அரசாங்கத்தின் அடுத்த நகர்வு
அரசியல்வாதிகள், அதிகாரிகள் அல்லது பிற தனிநபர்கள் முறைகேடாகச் சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்வதற்கு புதிய அரச நிறுவனமொன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த நிறுவத்தை சொத்து மீட்பு நிறுவனம் அரசாங்கம் அடையாளப்படுத்த உள்ளது. உலகின் பல வளர்ந்த நாடுகளில் இவ்வாறான நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதனை ஒத்ததாகவே இந்த நிறுவனமும் இருக்கும்.
வெளிநாட்டில் அல்லது நாட்டிற்குள் உள்ள பணமோசடி மற்றும் பிற வழிகளில் பெறப்பட்ட முறைகேடான ஆதாயங்கள் அல்லது பணத்தைக் கண்டறிந்து அவற்றை மீட்பதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது இந்த நிறுவனத்தின் பணியாக இருக்கும்.
அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள சட்டவிரோத கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் பல இரகசிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஊழல் மற்றும் மோசடிகளின் ஊடாக சேர்க்கப்பட்ட சட்டவிரோத சொத்துகள் மீட்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
அதன் பிரகாரம் அவர் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், ஊழல் – மோசடியில் ஈடுபட்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகளுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமாக விசாரிக்கும் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது்