இலக்கியம்கவிதைகள்

இளைய ராஜா…. கவிதை… முல்லை அமுதன்

அநதப் பொழுதில்
அருகருகாய் மிக
நெருக்கமாய்
எதுவுமே பேசாமல்
இளைய ராஜாவின்
மெல்லிசையில் மயங்கியபடி
உன் தொடுகையில்
வார்த்தைகள் மறந்து…

காலா காலத்திற்கு வாழ்ந்துவிடவேண்டும்…
ஆனாலும்,ஆனாலும்
காலமும்,இக்கணப்பொழுதும் வேறாகி நிற்பதை
கண்முன்னால்
சிதைந்து…

இடிபாடுகளுக்கிடையே
உன் விரல் தொடுகையில்….

தோழி…
பல கோடி முத்தங்கள் வேண்டம்…
என்னில் நீ தொட்ட குருதித் தடங்களை
கழுவி விடாதே..

காலா காலத்திற்கும்
என் இறப்பிற்குப் பின்பும்
உன்னுடன் கூடவரும்…

முல்லை அமுதன்
21/10/2024

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *