இந்தியா

விபத்தில் 8 சிறுவர்கள் உட்பட 12 பேர் பலி

ராஜஸ்தானில் இடம்பெற்ற விபத்தில், 8 சிறுவர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

குவாலியரில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று, தோல்பூர் மாவட்டத்தில் உள்ள சுனிபூர் அருகே வந்துகொண்டிருந்தபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாக வந்த மாறி ஒன்றுடன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பஸ் சாரதி அதிக வேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது..

உயிரிழந்த சிறுவர்கள் 6 முதல் 14 வயதுக்கு. இடைப்பட்டவர்கள் எனவும், உயிரிழந்தவர்களில் தம்பதி ஒன்று உள்ளடங்குவதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *