உலகம்

இங்கிலாந்து, வேல்ஸ் நீர் வழங்கல் நிறுவனங்களுக்கு £158 மில்லியன் அபராதம்!

விநியோகத் தடைகள், கசிவுகள் மற்றும் மாசுபாட்டைக் குறைப்பதற்கான முக்கிய இலக்குகளைத் தவறவிட்டதால் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள நீர் வழங்கல் நிறுவனங்களுக்கு 157.6 மில்லியன் பவுண்ட்ஸ்களை வாடிக்கையாளர்களுக்கு அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

2025, 2026 ஆம் ஆண்டுகளில் வாடிக்கையாளர்களுக்கான கட்டணத்தை குறைப்பதன் மூலமாக நிறுவனங்கள் இந்த அபராதத் தொகையினை திருப்பி செலுத்தும்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள நீர் மற்றும் கழிவுநீர் நிறுவனங்களின் செயல்திறனை ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து தொழில் கட்டுப்பாட்டாளர் இந்த உத்தரவினை அறிவித்துள்ளார்.

இதேவேளை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தண்ணீர் கட்டணம் சராசரியாக 21% உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.