கவிதைகள்

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!… கவிதைகள்…. கண்மணிமா

சிற்பிகளை வார்த்தெடுக்க சிறம் படும் முத்துக்களே…
வெற்றிகளை உயிlலெழுத அறம் செய்யும் அகிம்சான்களே
உங்களின் அயராத உழைப்புக்கு
அடிபணியும் அகிலத்தின் மானுடமே .,..

புலமை பித்தர்களே
புண்ணியம் சேகரிக்கும் உங்கள் புரட்சி
யுத்தம் என்ன கைகொண்ட காகித
வித்தையும் விரல் கொண்ட பேனையுமோ……

பசுமரத்தாணி கொண்டே பதிந்து விடுகிறது
நீங்கள் செதுக்கிய கிறுக்கல்கள் இங்கே சிற்பங்களாய்…..

அன்னை அய்யனுக்கு அடுத்த தாயாய் பிள்ளைகளை ஆற்றுப்படுத்தும் உம்மை ஆராதிக்க வேண்டியே யானும் ஆசான் ஆனேனோ…..

நட்சத்திர கூட்டமதில் நாம் நட்ட பெயர் பலகை சுடரொலியாய் மின்னிடவே ஓட்டை சத்திரத்தில் ஓரமாய் வழிகாட்டி மறையும் உன் விழி இங்கே மின்னும் பல நட்சத்திரமாய் பதியுதிங்கே….

கின்னஸ் புத்தகம் அது ஆசிரியர் புத்தகம் என அடையாளம் ஆகட்டும்
உண்மையான சாதனையாளர்கள் இங்கே இருக்கிறார்கள்…
உலகின் அதிசயங்கள் ஓர் முறை மீள் பரிசீலனைக்கு செல்லட்டும்
உண்மை அதிசயம் இங்கே இருக்கிறது…..

ஏழு கடல்களும் எழுந்து மண்டியிடட்டும்.
ஆறு மலைகளும் சற்றே இறங்கி வரட்டும்…
ஐம் பூதங்களும் வெட்கி தலை குனியட்டும்…
நாட் திசைகளும் உம் புகழ் பாடட்டும்…
முக்கனி கொண்டே உம்மை உலகம் பூஜீக்கட்டும்…
இரு கரம் ஏந்தி உம்மை வாழ்த்தி வணங்கட்டும்…
உலகின் ஒரே தெய்வம் நீங்கள் என.

நிமிர்ந்து செல்வோம்..
நிஜம் புதைக்கப்பட்டாலும் – நாளை
எழுந்து நிற்கும்….
வலைந்து கொடுக்காதிருப்போம்
அது நாணலின் குணமல்லவா..
அதற்கு முதுகெழும்பு கிடையாது…

குட்ட குட்ட குனியும்
கோழைத்தனம் விடுத்து
எழுந்து நடப்போம்..
கூனல் அது வேண்டாம்
குறை கூறும் கூட்டத்தை தரைமேல்
ஏணிகளாக்கி எட்டெடுத்து
ஏறிக்காட்டுவோம் மேலே..

முட்டுக்கொடுப்போம் – சிலரின்
முயற்சிகள் வெற்றி காணாமலிருக்கிறது..
தட்டிகொடுப்போம் – பலரின்
படைப்புக்கள் பேசப்படாமலிருக்கிறது

வெட்டிவிடுவோம் – சில போலி முகங்கள்
வெளிப்படாமல் ஒளிந்து கிடக்கிறது…

கற்றுக்கொண்டே இருப்போம் – நாம்
உருவாக்க வேண்டியவர்கள்
பிறந்து கொண்டே இருக்கிறார்கள்..
பட்டை தீட்டுவோம் – எம் சமூகத்தை
சீர்திருதத்தும் வா (ஜோ) திகள்
நாம் மட்டுமே…

Teachers Day 2024 on september 5 inspiring quotes and wishes for teachers |  Teacher's Day 2024 Wishes : ஆசிரியர் தின வாழ்த்துகள், பொன்மொழிகள் மற்றும்  போட்டோஸ்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.