கவிதைகள்

தாமதம்…!!!!!… கவிதைகள்…. கண்மணிமா

சேவல் சேதி சொல்லும் முன்னே
என் செவிகள் எழுகின்றன..
என்றாலும் ஏனோ
எந்நாலும் நிற்கிறேன்
காரியாலய வாசலில்….

என்ன காரணம் சொல்ல!
எத்தனை காரணம் சொல்ல!
எதை முதலில் சொல்ல!
ஏன் தாமதம் என
ஏகப்பட்ட கேள்விகள் கேட்கும்
என் அதிகாரியிடம்
என்ன காரணம் சொல்ல…!!

அம்மணியே!
அரச பேரூந்தில்
அடுக்கி ஏற்றிய ஆட்களுக்கு
நடுவில் அறைகுறையாய் மடிந்ததில்
மூச்சு முட்டியது..
முண்டியடித்ததில்
விரல்கள் கூட வீங்கிவிட்டன…
நீர் கேட்கும் வினாக்களுக்கு
விடை எழுதும் சிந்தை வர
சற்று நாளியாகும்..!!!

பொறும்..அல்லது
சொல்கிறேன் எழுதும்..

கூந்தல் முடிந்து குளிக்கச்
சென்றேன் தண்ணீர் தாமதம் !!

சமையலுக்கு சப்பாத்தி
போட்டேன்… எரிவாயு தீர்ந்ததில்
எல்லாம் தாமதம் !!

பிளைக்கு இரட்டை ஜடை
போட்டதில் இன்னும் தாமதம் !!

இளையவனை இழுத்து நடந்ததில்
இருவருக்கும் தாமதம் !!

ஒரு நிமிட இடைவெளியில்
முதல் பஸ்ஸுக்கு தாமதம் !!

இரண்டாவது பஸ்ஸை
தள்ளிக்கொண்டு வந்ததால்
இப்படி தாமதம் !!

இப்போ உங்கள் விசாரணையில்
விளக்கமளிப்பதால்
என் முதல் பாடவேளையும்
தாமதம்…

World Teachers' Day 2024: 100+ best wishes, messages and quotes to share |  Lifestyle - Business Standard

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *