ட்ரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்ட ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார் தற்பொழுது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் படத்தின் முதற்பார்வை மற்றும் கதாபாத்திரங்களின் புகைப்படத்தைப் படக்குழு வெளியிட்டதால் இரசிகர்கள் பெறும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

கடந்த மாதம் படத்திற்கான எவ்வித அறிவிப்பும் கிடைக்காததால் இரசிகர்கள் மனம் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் , டொனால்ட் டிரம்ப்பிடம்
ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தேர்தல் தொடர்பாக அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் தேர்தல் வாக்குமூல அறிக்கையைப் பற்றிப் பதிவு செய்து இருந்தார். அப்பதிவில் தல இரசிகர்கள் எங்களுக்கு நீங்கள் விடாமுயற்சி திரைப்படத்தில் புதிய அறிவிப்பு மற்றும் வெளியீட்டுத் திகதியைத் தெரிவித்தால். நானும் என் மதுரையைச் சேர்ந்த நண்பர்களும் கண்டிப்பாக உங்களுக்கு வாக்களிப்போம் என பதிவு செய்துள்ளனர். இந்த பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button