உலகம்

ஊழல் மோசடி குற்றச்சாட்டு: சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு சிறை தண்டனை

சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனுக்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 7ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் ஈஸ்வரனுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதியில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சிங்கப்பூரின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக அரசு ஊழியர் பதவி வகித்தபோது விலை மதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றுகொண்டதாக ஈஸ்வரன் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பிரிவு 165ன் கீழ் சுமத்தப்பட்டன.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 165, ஒரு பொதுச் சேவை ஊழியர், அவர் அதிகாரபூர்வ நிலையில் எவரிடமிருந்தும், விலைமதிப்புள்ள எதையும், இலவசமாக அல்லது போதிய கட்டணமின்றி ஏற்றுக்கொள்வது அல்லது பெறுவது குற்றமாகும்.

விசாரணைக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாகவும் ஈஸ்வரன் மீது ஒரு குற்றம் சுமத்தப்பட்டது.

அமைச்சர் பதவி வகித்தபோது 400,000 டொலரிற்கும் இற்கும் அதிக மதிப்புள்ள பொருள்களை ஈஸ்வரன் அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் 380,000 அமெரிக்க டொலர்களையு முறையற்ற வகையில் பெறப்பட்ட அன்பளிப்புகளையும் அரசாங்கத்திடம் ஈஸ்வரன் திருப்பிக் கொடுத்துவிட்டத்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவருக்கு ஆறிலிருந்து ஏழு மாதச் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை வலியுறுத்தினர்.

அதனை ஏற்க மறுத்த நீதிபதி அரசாங்க அமைப்புகளில் திறன்மிக்க நிர்வாகத்திற்கு நம்பிக்கையும் நம்பகத்தன்மையும் அடிப்படைக் கொள்கைகள் என வலியுறுத்தி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.