யாழில் அஸ்வின் மற்றும் விராஜின் நினைவேந்தல்

மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் நினைவேந்தல் நிகழ்வும், தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸின் அஞ்சலி நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.

யாழ். ஊடக அமையத்தில், அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமாரின் தலைமையில் நடைபெற்றது.

அஸ்வினின் திருவுருவப்படத்துக்கு அஸ்வினின் பெற்றோர் மலர்மாலை அணிவித்தனர். தொடர்ந்து தேசிய பற்றாளர் விராஜ் மென்டீஸின் திருவுருவப்படத்துக்கு யாழ். பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி கலாநிதி ரகுராமும் ஊடக கற்கைகள் துறை தலைவர் பூங்குழலியும் மலர்மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து அஸ்வின் மற்றும் தேசிய பற்றாளர் விராஜ் மென்டிஸ் ஆகியோரின் நினைவுரைகள்  இடம்பெற்றன.

அடுத்து, அஸ்வினின் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஊடக கற்கைநெறியை தொடரும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட தேவையுடைய மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button