இலங்கை

நாடாளுமன்ற தேர்தல் – அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே சின்னத்தில்?; தொடரும் கலந்துரையாடல்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

கொழும்பு ப்லவர் வீதியில் அமைந்துள்ள அரசியல் காரியாலயத்தில் உரையாற்றிய முன்னாள் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க, பொதுத் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சுவார்த்தைகள் சாதகமான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையில் நேற்று (26) பகல் முழுவதும் அவ்வப்போது இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

ஒரே குழுவாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை உறுதியானது, எனினும், கட்சி மற்றும் சின்னம் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என எஸ். பி திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.