உலகம்

தொடர்ந்தும் பல மாநிலங்களில் கமலா ஹாரிஸ் முன்னிலை; சூடுபிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், அரிசோனா, மிச்சிகன் மற்றும் பென்சில்வேனியா போன்ற பல முக்கிய மாநிலங்களில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை விட முன்னிலையில் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனாலட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.

இருவரும் தீவிரப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வரும் நிலையில் UMass Lowell’s Centre for Public Opinion மற்றும் YouGov வெளியிட்டுள்ள அண்மைய கருத்துக்கணிப்பின்படி, மிச்சிகனில் ட்ரம்பை விட கமலா ஹாரிஸ் முன்னிலை வகிக்கின்றார்.

இதேவேளை, கிரேட் லேக்ஸ் மாநிலத்தில் ஹாரிஸ் 48 சதவீதம் முதல் 43 சதவீதம் வரை முன்னிலை வகிக்கிறார்.

பென்சில்வேனியாவில் ட்ரம்பின் 46 சதவீதத்திற்கு எதிராக ஹாரிஸ் 48 சதவீதமாக முன்னிலை வகிப்பதாக UMass Lowell’s Centre for Public Opinion தெரிவித்துள்ளது.

ஃபாக்ஸ் நியூஸின் புதிய கருத்துக்கணிப்பின்படி ஜோர்ஜியாவிலும் ட்ரம்பை விட கமலா ஹாரிஸ் சற்று முன்னிலை வகிக்கின்றார். ஆனாலும் அரிசோனாவில் பின்தங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.