சிட்னியில் வெளியாகும் மாத்தளை சோமுவின் ‘ஒற்றைத்தோடு’ சிறுகதைத் தொகுதி!… ஐங்கரன் விக்கினேஸ்வரா
புலம்பெயர் மண்ணில் முன்னணி ஈழத்து எழுத்தாளரான மாத்தளை சோமுவின் 30 வது நூலான “ஒற்றைத்தோடு” சிறுகதைத் தொகுதி வெளியீடும் அறிமுகமும் சிட்னியில் எதிர்வரும் ஞாயிறு 29/9/24 நிகழவுள்ளது.
எழுத்தாளர் மாத்தளை சோமு சிறுகதை, புதினம், பயண இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதி மலையக இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர். அத்துடன் மலையக இலக்கிய வளர்ச்சிக்குப் பங்காற்றிய மாத்தளை சோமுவின் பெயர் தமிழ் இலக்கிய உலகில் மிகவும் பரிச்சயமானது. இலக்கியத் துறையில் தனக்கென தனியான ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர்.
அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த நிலையில் அமைதியாக தனது எழுத்துப்பணியை சமூக நோக்கோடு செய்துவருபவர். அவரது இலக்கிய முயற்சிகளின் தொடராக முப்பதாவது நூல் வெளியாகிறது.
இந்நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 29/9/24 ஞாயிற்றுக்கிழமை மாலை 1530 மணிக்கு, சிட்னியில் உள்ள துங்காபி புனித அந்தோனியார் தேவாலய மண்டபத்தில் (St,Anthony Church Hall, 27-39, Aurelia Street, Toongabbie, NSW) நடைபெறும்.
மாத்தளை சோமுவிற்கு எழுத்தே அவரின் மூச்சாக இருக்கிறது. இந்நிகழ்வின் தொடக்க இணைப்புரையை திரு. குலசேகரம் சஞ்சயன் அவர்களும் , வரவேற்புரையை சமூக ஆர்வலர் திரு. வசந்தராஜா அவர்கள் ஆற்றுவார்.
இந்நிகழ்வின் தலைமை உரையை கலாநிதி குலம் சண்முகம் அவர்களும்,
வாழ்த்துரைகளை பத்திரிகையாளர் திரு. எஸ்.சுந்தரதாஸ் மற்றும் கலாநிதி மாலினி ஆனந்தகிருஷ்ணன் அவர்கள் ஆற்றுவார்.
இலக்கியப் படைப்புகள் அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள மாத்தளை சோமு பற்றிய படைப்பாளி குறித்தப் பகிர்வை ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் உரையாற்றுவார்.
ஒற்றைத்தோடு சிறுகதைத் தொகுதி நூல் அறிமுகம் உரையினை செல்வி வி.விஜயாழ், திருமதி. இந்துமதி சிறினிவாசன், திரு. மயில்வாகனம் தனபாலசிங்கம் அவர்களும் உரையாற்றுவர். அத்துடன் முனைவர் இலக்குவன் சொக்கலிங்கம் (ஆங்கில மொழி பயிற்றல் துறை, அரசு, நியூசிலாந்து) அவர்களும் உரையாற்றுவர்.
நூலாசிரியர் மாத்தளை சோமுவின் பதிலுரையை தொடரந்து, நிகழ்வின் நன்றியுரையை திரு, பூபாலசிங்கம் சின்னய்யா அவர்களும் உரையாற்றுவர்.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா