இலங்கை மக்களுக்கு அமெரிக்கா பாராட்டு; ஜனாதிபதி அநுரவுக்கு வாழ்த்து

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

அதில்,

வாக்களிக்கும் உரிமையை அமைதியான முறையில் பயன்படுத்திய இலங்கை மக்களை நாங்கள் பாராட்டுகிறோம்.

இந்த தேர்தல் இலங்கையின் ஜனநாயக அமைப்பின் பலம், அமைதி மற்றும் ஜனநாயக வழிமுறைகளின் மூலம் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் குடிமக்களின் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

ஒரு நிலையான, வளமான மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சமூகத்தை கட்டியெழுப்ப இலங்கைக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும்.

ஜனநாயக விழுமியங்கள் மற்றும் தேசிய இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் அடிப்படையிலான எமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்பட நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.

நமது நாடுகளுக்கு இடையே பொருளாதார, பாதுகாப்பு மற்றும் ஆழமான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அமெரிக்காவின் உத்தியோகபூர்வ தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button