பலதும் பத்தும்

நதிகளின் ராணி – அமேசான்

உலகில் உள்ள காடுகளிலேயே மிகப்பெரியது அமேசான். அடர்த்தியான காடும் இதுதான்.
அமேசான் என்றால் உயரமான திடகாத்திரமான பெண் என்று அர்த்தம். அமேசான் நதியை நதிகளின் ராணி என்று அழைக்கிறார்கள்.

6 ஆயிரத்து 712 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நதி, ராணி என்றால் அதை சூழ்ந்திருக்கும் காடு ராஜா தானே!. அமேசான் காடு பிரேசில், கொலம்பியா, வெனிசுலா உள்பட 8 நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது. சுமார் 25 லட்சம் சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது.

பூமிப்பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவீதம் இங்கு தான் உற்பத்தியாகிறது.
உலகப்பறவை இனங்களில் மூன்றில் ஒரு பங்கு இங்குதான் இருக்கிறது.
உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் அதாவது தாவரம், விலங்கு, பூச்சி போன்றவற்றில் அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் இருக்கின்றன.
2 ஆயிரத்து 500 வகை மீன்கள், 1,500 வகை பறவைகள், 1,800 வகை வண்ணத்துப்பூச்சிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன.

இங்கு 20 ஆயிரம் ஆண்டுகளாக பழங்குடியினர் வாழ்ந்து வருகிறார்கள். இங்கு வாழும் 215 பழங்குடி குழுக்களை சேர்ந்த மக்கள் 170 வகையான மொழிகள் பேசுகிறார்கள்.
அமேசான் காடுகளை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
வான் தளம் என்பது உயரமான மரங்களை குறிக்கிறது.

உயரமான மரத்தில் கழுகு, பருந்து போன்ற பறவை இனங்கள் வாழ்கின்றன.

2–வதாக குரங்கு போன்ற உயிரினங்கள் வாழும் இடமாகும்,

3–வதாக பூச்சிகள், ஊர்வன போன்றவை வாழ்கின்றன.

4–வதாக தரைப்பகுதியில் பயங்கர காட்டு விலங்குகள் உள்ளன.

அனகோண்டா போன்ற உலகின் மிகப்பெரிய பாம்பு இனம் இருப்பது இங்கு தான்.
இந்த காடு மற்றும் நதியின் ஆயுள் கிட்டத்தட்ட 5.5 கோடி வருடங்கள்.
அமேசான் நதி பிறக்கும் இடத்தில் இருந்து 1,100 துணை நதிகளை தன்னோடு இணைத்துக்கொண்டு கடலில் சென்று சேருகிறது.

இங்கு இருக்கும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட தாவரங்களை இன்றும் உலகத் தாவரவியல் வல்லுநர்களே படித்தது இல்லை என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உலகுக்கு உணர்த்தும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.