மௌனம் கலைத்து இளவரசர் ஹரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது பிரிட்டிஷ் அரச குடும்பம்
இரண்டு ஆண்டு கால மௌனத்தை கலைத்து விட்டு இளவரசர் ஹரிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளது பிரிட்டிஷ் அரச குடும்பம்.
இங்கிலாந்தில் அரண்மனையில் இளவரசராக வலம் வந்து கொண்டிருந்த ஹ ரி கடந்த 2020-ம் ஆண்டில் அரச வாழ்க்கையை விட்டு வெளியேறினார்.
கலிபோர்னியா நகரில் தனது மனைவி மேகன் உடன் வசித்து வரும் ஹ ரி தன்னுடைய 40-வது பிறந்தநாளை மகன் ஆர்ச்சி மகள் லிமிபெட் மற்றும் நண்பர்களுடன் எளிமையாக கொண்டாடினார். இறுதியாக அரச குடும்ப தரப்பிடம் இருந்து 2021 ம் ஆண்டு வாழ்த்து செய்தி தெரிவிக்கப்பட்டி ருந்தது.
இந்நிலையில் இளவரசர் வில்லியம் மற்றும் கேட்மிடில்டன் தங்களின் எக்ஸ் சமூக வலை தளம் மூலம் ஹ ரிக்கு பிறந்த நாள்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஹரி அரசகுடும்பத்தை விட்டு வெளியேறினாலும் பக்கிங்ஹாம் மாளிகை ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை அங்கீகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.