விராட் கோலியுடன் செல்பி எடுத்த ராதிகா சரத்குமார் (video)

விமான பயனத்தின்போது விராட் கோலியை சந்தித்து அவருடன் நடிகை ராதிகா சரத்குமார் எடுத்த செல்பி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இது தொடர்பாக ராதிகா தனது இணைய பதிவில், “இலட்சக்கணக்கான மக்களின் அன்புக்குரிய விராட் கோலியை லண்டனிலிருந்து சென்னை திரும்பும்போது சந்தித்ததில் மகிழ்ச்சி.

சென்னையில்தான் விளையாடவுள்ளேன் என்றார். அவர் வெற்றி பெற வாழ்த்தினேன். செல்பிக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதேவேளை, இந்தியா- வங்கதேசம் அணிகள் டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் மோத உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்காக இந்திய அணி சென்னை சென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button