இலக்கியச்சோலை

என் பார்வையில் ‘பரடைஸ்’ (Paradise)…. ஶ்ரீரஞ்சனி

இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கையின் இயற்கையெழிலை உவப்பவர்கள் அதனைச் சொர்க்கமாகக் காண்பதில் வியப்பெதுவுமில்லை. ஓங்கி உயர்ந்து நிற்கும் மலைகளையும், பசுமையான மலைச்சாரல்களையும் மத்தியிலும்; ஆர்ப்பரிக்கும் கடலையும், வெண்மணல் கடற்கரைகளையும் எல்லைகளிலும் கொண்டிருக்கும் இந்தச் சொர்க்கத்தைத் தேடிவருகின்ற ஓர் இளம் தம்பதியினரது கதைதான், Prasanna Vithanageஇன் Paradise என ஒற்றைவரியில் சொல்லிவிடலாம். ஆனால், பல்வேறு விருதுகளை வென்றிருக்கும் இந்த 90 நிமிடத் திரைப்படத்தின் ஊடாக இயக்குநர் கூறவிழைகின்ற/காட்டவிரும்புகின்ற யதார்த்தமும் அதன் தாக்கங்களும் அளவற்றவை.

ஏப்ரல் 12, 2022 திரையில் தெரிவதுடன் படம் ஆரம்பமாகிறது. தொடர்ந்து bankruptcyஐ ஶ்ரீலங்கா அறிவித்திருப்பதையும், எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார வெட்டு, விலைவாசியேற்றம் போன்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நிகழ்த்துவதையும், ஐனாதிபதி Rajapaksaஐ ராஜினமாச் செய்யும்படி கோருவதையும் எழுத்தோட்டம் காட்டுகிறது. ஆர்ப்பாட்டக்கோஷங்களும், அம்புலன்ஸ், பொலிஸ்கார் போன்ற வாகனங்களின் எச்சரிக்கை ஒலிகளும் பின்புலத்தில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. முடிவில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவடைந்திருக்கும் அந்த நேரத்தில், சொர்க்கத்தைத் தேடிச் சில சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர் என்ற எழுத்தோட்டம் ஜூன் 20ம் திகதியைக் காட்டுகிறது.

அதன்பின்னர், விமானநிலையத்திலிருந்து, தங்களின் சுற்றுலா விடுதிக்குச் செல்லும் வாகனத்தின் பின்ஆசனத்தில், இலங்கைக்கும் ராமயணத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய youtube ஆங்கிலப் பதிவொன்றில் கேசவ் மூழ்கியிருக்க, அவனின் தோளில் அமிர்தா தூங்கிக்கொண்டிருக்கும் காட்சியை நாங்கள் பார்க்கிறோம்.

இராமயணத்துடன் தொடர்பான இடங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கும் அவர்களின் பயணத்திட்டத்தின் முதல் பகுதியாக, ராவணன் சீதையைக் கடத்திக்கொண்டுவந்து சிறைவைத்த இடமென, அழகான நீர்வீழ்ச்சியுடன்கூடிய அழகுகொழிக்கும் மலைப்பிரதேசம் ஒன்றை, அவர்களின் சுற்றுலா வழிகாட்டியும், சாரதியுமான அன்ரூ அவர்களுக்குக் காட்டுகிறார். அதேநேரத்தில், இலங்கையில் அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற பதற்றத்துடனான வீடியோ அழைப்பொன்று அமிர்தாவுக்கு அவளின் அம்மாவிடம் இருந்து வருகிறது. அந்த அழகான நீர்வீழ்ச்சியையும் கேசவ்வையும் வீடியோவில் காட்டி, அங்கு எந்தப் பிரச்சினையுமில்லையென அம்மாவை ஆறுதல்படுத்துகிறாள் அமிர்தா.

தொடர்ந்து, ராவணன் வாழ்ந்த, இறந்த இடமெனக் குகை ஒன்றைக் காட்டும் அன்ரூ அங்கு இராவணன் தூக்கத்திலிருக்கிறான் என்றும், ஒரு நாளைக்கு அவன் எழும்பிவந்து இலங்கையைக் காப்பாற்றுவான் என்றும் சிலர் நம்புவதாகக் கூறுகிறார். அப்போது கேசவ் இயக்கவிருக்கும் தொலைக்காட்சித் தொடர் ஒன்றை ஒன்பது வாரங்களுக்கு ஒளிபரப்புவதற்கு Netflix முடிவுசெய்திருக்கும் நல்ல செய்தி கேசவ்க்குக் கிடைக்கிறது. அது கேசவ்வையும் அமிர்தாவையும் மிகுந்த பரபரப்புக்கும் மகிழ்ச்சிக்கும் உள்ளாக்குகிறது.

அதன்பின்னரான பயணத்தின்போது, நாட்டின் சூழ்நிலை தெட்டத்தெளிவாகத் தெரிகிறது. பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிக்கமுடியாத மக்கள் கோஷங்களுடனும், பதாகைகளுடனும் வழிமறித்து நிற்கின்றனர். ஆனால், அந்தச் சூழலைப் பற்றிய எவ்வித பிரக்ஞையின்றி, அவனுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பாராட்டுவதற்காக வந்த வீடியோ அழைப்பில், தன்னை மறந்து கேசவ் பேசிக்கொண்டிருக்கிறான். அமிர்தா மட்டும் அங்குமிங்கும் குழப்பத்துடன் நோக்குகிறாள். முடிவில் உல்லாசப் பிரயாணிகள் என்பதால் அந்தக் கூட்டத்தைத் தாண்டிப்போவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். “மிஸ்ரர் அன்ரூ, இலங்கையைக் காப்பாற்ற ராவணன் எழும்புறதற்கு இது சரியான நேரம்,” எனக் கூறிச் சிரிக்கிறாள் அமிர்தா.

Prasanna takes Indo-Lanka 'Paradise' to Busan | Print Edition - The Sunday Times, Sri Lanka

திருமண வாழ்வின் ஐந்தாம் வருட நிறைவைக் கொண்டாடுவதற்காக அங்கு வந்திருந்த அந்த மலையாளத் தம்பதியினருக்கு சுற்றுலா விடுதியில் இரவுணவு மெழுகுதிரி வெளிச்சத்தில் பரிமாறப்படுகிறது. மகிழ்ச்சியுடன் romanticஆக இருக்கிறது என்கிற அமிர்தாவுக்கு, அது power cut என்ற யதார்த்தத்தைச் சொல்கிறான் அந்த விடுதியில் வேலைசெய்யும் ஶ்ரீ. சாப்பிடமுன்பாக ஐந்து வருடங்களை அவனுடன் கழித்தமைக்காக அமிர்தாவுக்கு நன்றிகூறுகிறான் கேசவ்.

இரவுணவின் பின்னர், மீளவும் உன்னைக் காண்பேனா என மான் ஒன்றைக் கண்ட தன் அனுபவத்தைப் பற்றித் தனது blogஇல் எழுதிக்கொண்டிருக்கும் அமிர்தாவிடம் தொடங்கின நாவலை எழுது என்றவன், preproduction meeting ஒன்றில் கலந்துகொள்கிறான். நாவலை எழுதுவென அவன் கூறியதை ஊக்குவிப்பு என்பதா, தலையீடு என்பதா எனப் பார்வையாளர்களான எங்களுக்குள் வேறுபட்ட கருத்துக்கள் எழக்கூடும். அவனின் அந்தச் சந்திப்பு நன்கே முடிகிறது. நாளைக்கே என் குழுவினர் தயாரென நம்பிக்கையுடன் அறிவித்துவிட்டு படுக்கைக்குவரும் அவன், கஷ்டமான காலம் முடிந்தது, இனி வாழ்க்கையை அனுபவிக்கலாம், அவளின் 5 வருடக் காத்திருப்பும் முடிந்துவிட்டதால், குழந்தையையும் பெற்றுக்கொள்ளலாம் என மிகுந்த காதலுடன் அவளுடன் கலவிசெய்கிறான். அமிர்தாவும் மகிழ்வுடன் அதில் இணைகிறாள்.

Paradise' film review: Roshan and Darshana deliver their bestஆனால், அதேயிரவில் அவர்களின் மின்கணினிகளையும் கைத்தொலைபேசிகளையும் ஆயுதம்காட்டி அச்சுறுத்திக் களவெடுத்துச்செல்லும் முகமூடிக் கள்ளவர்களுடன் அவர்களின் அந்த மகிழ்ச்சியும் நிறைவும் சென்றுவிடுகின்றது. தொலைத்த பொருள்களைப் பற்றிப் புகார்செய்வதற்காகப் பொலிசைத் தொடர்புகொள்பவர்களுக்கு, டீசல் பிரச்சினையால் புலன்விசாரணக்கு வரமுடியாதுள்ளது என்ற யதார்த்தம் சொல்லப்படுகிறது. அது கேசவ்வுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. சூழல் பற்றிய எவ்வித கரிசனையுமின்றி, தனது தொலைக்காட்சித் தொடருக்கு வந்த இடரே பூதாகரமானது என்பதுபோல, தொலைந்த பொருள்கள் கிடைக்காவிடில் இந்தியாவின் High commissionerஐ அழைப்பேன் என சார்ஜன் பண்டாரவை அச்சுறுத்துகிறான் அவன்.

அத்துடன், படுக்கமுதல் யன்னலைப் பூட்டினியா என அமிர்தாவைத் திரும்பவும் கேட்கிறான். இதனைக் குற்றம்சாட்டல் எனலாமா, பிரச்சினை ஒன்றுக்குள் தத்தளிக்கும்போது சூழலை மீளவும் ஆராய்தல் எனலாமா? நீங்கள் எப்படி எடுப்பீர்கள்? முதலில் யன்னல் பூட்டப்பட்டிருந்ததா என அன்ரூ அவர்களைக் கேட்டபோது, யன்னலைப் பூட்டித்தானிருந்தோம் என்று சொன்னவன், அவளிடமும் கேட்டு உறுதிப்படுத்திவிடு பூட்டியிருந்திராவிட்டால் குளிராகவிருந்திருக்கும் என்றும் சொல்லியிருந்தமையால், அப்படி அவளிடம் அவன் திரும்பவும் கேட்டதை அவள் விளங்கிக்கொண்டிருக்கலாமா? அல்லது அவனில் அவள் கோபித்தது சரியா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? களவுபோனதால் உருவான சிக்கல்கள் பற்றி அவளிடம் பிரஸ்தாபித்து அவன் வருந்தியபோது, என்னுடைய பொருள்களும்தான் களவுபோயிருக்கின்றன என அமிர்தா சொன்னதை empathy இல்லாத தொடர்பாடல் எனலாமா? பதிலுக்கு என் projectஇல் எங்களின் வாழ்க்கை தங்கியிருக்கிறது என அவன் சொல்ல அவள் வெளிநடப்புச் செய்கிறாள்.

பண்டாராவுக்குக் கேசவ் கொடுத்த அழுத்தத்தின் விளைவு, மூன்று மலையகத் தமிழர்கள் கைதாகிறார்கள். அவர்கள்தான் அந்தக் கள்வர்களென உறுதியாகச் சொல்லமுடியாதென அவள் கூற, அவனோ அவர்கள்தான் அந்தக் கள்வர்கள் என்கிறான். அவர்கள் முகமூடி அணிந்திருந்தார்கள், அத்துடன் இருட்டாக இருந்தது, எப்படி அவனுக்கு அது உறுதியாகத்தெரியுமென அவள் அவனிடம் கேட்கிறாள். பின்னரும் கைதிகளுக்கு நிகழும் சித்திரவதையைத் தாங்கமுடியாமல், அதே கேள்வியைத் திரும்பவும் அவள் அவனிடம் கேட்டபோதும், தன் உணர்வு சொன்னது என்கிறான் அவன். எது நடந்தாலும் பரவாயில்லை, தொலைந்த பொருள்கள் கிடைத்தால்போதும் என்பதே அவனின் குறிக்கோளாக இருக்கிறது. அந்தச் சித்திரவதைகள், எங்களில் பெரும்பாலோனோர் அனுபவித்த சொல்லோணச் சித்திரவதைகளை நினைவூட்டி எங்களையும் மிகவும் கஷ்டப்படுத்துகிறது. அந்த நிகழ்வின் எதிரொலிகள் அவர்களிடையே இடைவெளியை உருவாக்குகிறது. அதனை ரோஷானும் தர்சனாவும் வெகு கச்சிதமாகத் தங்களின் உடல்மொழிகளால் காட்டியுள்ளனர்.

இலங்கைக்குச் சுற்றுலா வந்தது பற்றியும் அவர்கள் வாக்குவாதப்படுகிறார்கள், செலவு குறைவென நீ தானே தெரிவுசெய்தாய் என அவள் சொல்ல, காசுக்கு வழியில்லாமல் கஷ்டப்படுகிறவைக்கு இப்ப எங்களின் காசு கிடைக்கிறதுதானே என அவன் எரிச்சலுடன் பதிலளிக்கிறான்.

இப்படியாக அவன் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும்போது, மீளவும் மானைக் கண்ட களிப்பில்Mani Ratnam Unveils 'Paradise': A Promising Tale of Sri Lanka's Economic Turmoil! - Tamil News - IndiaGlitz.com humming பண்ணியபடி சாப்பிடும் அமிர்தாவிடம், உன்னால் எப்படி மகிழ்ச்சியாக இருக்கமுடிகிறதென அவன் கேட்க, தான் மகிழ்ச்சியில்லாமல் இருக்கவேண்டுமென அவன் விரும்புகிறானா என அவள் கேட்கிறாள். பின்னர் சமையல்காரன் அவளின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பாடுகிறான் எனப் படுக்கையில் மறுபக்கம் திரும்பிப்படுத்திருக்கும் அவளை அவன் சீண்டுகிறான். அவளோ அசையாமல் படுத்திருக்கிறாள். அவனால் நித்திரை கொள்ளமுடியவில்லை. எழுந்துசென்றவன் பாட்டுக்கச்சேரியில் இருந்தவர்களுடன் சேர்ந்து மதுபானம் அருந்திவிட்டு, தொலைந்த பொருள்களுக்காகக் காத்திருக்கும்போது, ராமயணச் சுற்றுலாவைத் தொடரலாமென அன்ரூவுக்குச் சொல்கிறான்.

அப்படியாகச் சீதா எலியவுக்குப் போகின்றனர். நீண்ட நாள்களின் பின்னர் அங்கேதான் சீதை சூரியவெளிச்சத்தைப் பார்த்தாள் என்றும், அங்குவந்துதான் அனுமான் சீதையைக் கண்டான் என்றும், ராமனின் மோதிரத்தைக் கொடுத்து நம்பிக்கையுடன் இருக்கவைத்தான் என்றும் அன்ரூ உற்சாகத்துடன் சொல்கிறார். அதற்கு அமிர்தா “பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டியிருக்கும்போது, அழுதுகொண்டு, ஆண்கள் வந்து தங்களைக் காப்பாற்றுவார்கள் எனப் பெண்கள் காத்திருப்பார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா, மிஸ்டர் அன்ரூ?” எனக் கேட்கிறாள். அந்தக் காலத்தில் பெண்கள் அப்படியிருந்திருக்கலாம் எனச் சமாளித்த அன்ரூவிடம், Jain ராமாயணத்தில் சீதையே ராவணனைக் கொலைசெய்தாள் என்றும், ராமாயணக் கதைக்கு 300 version இருக்கின்றது என்றும் கூறுகிறாள். அத்துடன், இராவணன் நித்திரையிலிருந்து எழும்பி ஒரு நாள் இலங்கையைக் காப்பாற்றுவான் என அன்ரூ சொன்னது வால்மீகி எழுதியதில்லை, அது அவனின் version எனச் சிரிக்கிறாள்.

இன்னொரு ஆணுடன் இருந்த சீதையை, ராவணனை வென்ற பின்பும் ராமனால் கூட்டிச்செல்ல முடியவில்லை என்றும், தனக்கு அக்கினிப் பரீட்சை வைக்கும்படி சீதை அழுது, கெஞ்சிக்கேட்டு நெருப்புக்குள் குதித்துத் தன் புனிதத்தை நிரூபித்தாள் என்றும் அங்கிருப்பவர் கூறுகிறார். அதை நமிட்டுச் சிரிப்புடன் அமிர்தா கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்த அன்ரூ, நான் சொன்னதையும் நீ அப்படித்தான் கேட்டிருப்பாய் என்றபோது, ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த விளக்கத்தை எடுத்துக்கொள்கின்றனர், அதில் பிரச்சினையில்லை என்கிறாள் அவள்.

அதேவேளையில் மின்வெட்டின்போது, ஆஸ்பத்திரி ஜெனரேற்றர் இயங்குவதற்கான டீசல் இருக்காததால், களவெடுத்ததாகக் கைதுசெய்யப்பட்டுச் சித்திரவதைக்குள்ளான தமிழ்க்கைதி ஒருவன் ஒட்சிசன் கிடைக்காமல் இறந்துவிடுகிறான். அதனால் மக்கள் கொந்தளிக்கின்றனர். பொலிஸ் ஸ்ரேசனுக்குக் கற்கள் எறியப்பட்டுகின்றன. அந்த நேரத்தில்கூட தன் பொருள்கள் எப்போது கிடைக்கும் என்பதே கேசவ்வின் கரிசனையாக இருக்கிறது. நாளைக்கு, நாளைக்கு என நாள்கடத்திக் கொண்டிருந்த பொலிஸ், முடிவில் களவெடுக்கப்பட்ட பொருள்களைக் கண்டெடுப்பதற்குக் கால அவகாசம் கேட்கிறது, இனியும் கால அவகாசம் தரமுடியாது, ஶ்ரீலங்காவைவிட்டு வெளியேறப் போகிறோம் என்ற கேசவ், தனக்கு எவரைப் பற்றியும் அக்கறையில்லை என்றும், பொருள்கள் கிடைக்கும்வரை அங்கேயே காத்திருக்கப்போகிறோம் என்றும் சொல்கிறான். ஆர்ப்பாட்டம் நிகழும்போது, அங்கிருப்பது பாதுகாப்பில்லையென அவர்களை அகலச்சொல்கின்றார் பண்டாரா. (ஆனால், மலையகத் தமிழர்கள் துணிந்து பொலிஸ் ஸ்ரேசனுக்குக் கல்லெறிவார்கள் என்பதோ, அவர்கள் கல்லெறியப் பொலிஸ் பார்த்துக்கொண்டிருக்கும் என்பதோ யதார்த்தமில்லை என்பது வேறுவிடயம்.)

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition Prasanna's film 'Paradise' wins international acclaim in Spain“எப்படி அவன் இறந்தான்?” என்ற அமிர்தாவின் கேள்விக்கு, அவன் இறந்தது தங்களின் பிழை இல்லை, டீசல் இல்லாததால்தான் அவன் இறந்தான் என்று விளக்கமளித்த சார்ஜனிடம், “அந்த இறப்புக்கு நாங்கள் பொறுப்பில்லையா?” என்கிறாள் அவள். “இல்லை, அவன்தான் உங்களின் பிரச்சினைகளுக்கும் எங்களின் பிரச்சினைகளுக்கும் பொறுப்பு,” என்கிறான் பண்டாரா. “மனித உயிர்களுக்குப் பெறுமதி கிடையாதா?” என வருந்தும் அமிர்தாவிடம், தேர்தல் நேரத்தில் ஒரு வாக்குப் பெறுமதி இருக்கே என்கிறான் அவன். அது ஏதோ பெரிய பகிடிபோல மற்றப் பொலிஸ் சிரிக்கிறான். பின்னர் இன்னொரு கட்டத்தில் அந்த இறப்புக்கு நாங்கள் பொறுப்பில்லையா என கேசவ்விடம் அவள் கேட்கிறாள். அதற்கவன், நாங்கள் எப்படிப் பொறுப்பு, களவெடுத்ததை ஒத்துக்கொண்டு அவனே கையொப்பமிட்டிருக்கிறான், நீ பார்த்தாய்தானே என்கிறான். அந்தக் கையொப்பம் எந்த நிலைமையில் எடுக்கப்பட்டிருக்குமென்ற யதார்த்தம் அமிர்தாவுக்கு அவனில் கோபத்தை ஏற்படுத்துகிறது.

அன்றிரவு அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது துவக்குச் சூடு கேட்கிறது. “Poor deer” என்கிறான் கேசவ், அவளுக்குச் சாப்பிடமுடியவில்லை. இறந்த அந்தக் கைதி அவளின் நினைவுக்கு வந்திருப்பானோ, என்னவோ. அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக அந்த விடுதிக்குச் சென்றபோதுதான் களவுநடந்த இடத்தைப் புலன்விசாரணை செய்கிறான் பண்டாரா. யன்னல் உடைக்கப்பட்டிருக்காததால் அந்த விடுதியில் வேலைசெய்யும் தமிழ்/முஸ்லிம் இளைஞர்கள் அந்தக் களவுக்குக் கூட்டாக இருந்திருக்கிறார்கள் என்றும், கறுப்புநிற மலையகப் பையனை நம்பமுடியாது அவன்தான் யன்னலைத் திறந்துவிட்டிருப்பான் என்றும் சார்ஜன் தன் அனுமானத்தைச் சொல்ல, இன்னொரு அப்பாவி சித்திரவதைக்குள்ளாவதை விரும்பாமலோ என்னவோ, தானே யன்னலைத் திறந்துவைத்திருந்ததாக அமிர்தா சொல்கிறாள். ஏற்கனவே சிலரைச் சும்மா கைதுசெய்து சித்திரவதை செய்துபோட்டு, இப்ப என்னையும் மாட்டப்போகிறாயா எனக் கோபத்துடன் வேட்டையாடும் துவக்கை, பண்டாராவுக்கு எதிராக ஶ்ரீ தூக்க, சுடவேண்டாமென அவனைத் தடுத்த அமிர்தா, அந்தத் துவக்கைத் தான் வாங்கிக்கொள்கிறாள். இவை எதற்குமே கேசவ் எதுவும் சொல்லவில்லை, எப்படியாவது தொலைந்த பொருள்கள் கிடைத்துவிட்டால் போதுமென்பதே அவனின் எண்ணமாக இருக்கிறது.

ஶ்ரீயின் செய்கையால் ஆத்திரமடைந்த பண்டாரா தன் துவக்கை எடுப்பதற்காக வெளியே சென்றபோது, மக்கள் அந்த விடுதிக்கும் வந்து கற்களை எறிவதைப் பார்க்கிறான். அதைத் தடுப்பதற்காக அவர்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறான். ஒரு கட்டத்தில் பண்டாராமீது கோடரி ஒன்று பாய, அவன் மயங்கி விழுந்துவிடுகிறான். பண்டாரா இறந்துவிட்டதாக நினைத்த கேசவ், பண்டாராவின் துப்பாக்கியை எடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுட ஆரம்பிக்கிறான். அதனை அமிர்தாவால் சகிக்கமுடியவில்லை, அதனைத் தர்சனா தன் முக உணர்வுகளால் பிரமாதமாக வெளிக்காட்டியிருந்தார். முடிவில், மானைச் சுடவேண்டாம், பண்டாராவைச் சுட வேண்டாம் என்றெல்லாம் எந்தத் துப்பாக்கியிலிருந்து குண்டு பாய்வதைத் தடுத்தாளோ, அதே துப்பாக்கியை அவள் இயக்குகிறாள். அது கேசவ்வைப் பலிகொள்கிறது. அவள் அலறுகிறாள். (கொந்தளித்து வந்தவர்களின் பிரச்சினை எப்படியோ அத்துடன் முடிந்துவிடுகிறது).

பின்னர், அந்தச் சம்பவம் தொடர்பாகச் சாட்சியம் சொல்லும்போது, என்ன நடந்தெனத் தனக்குத்Paradise Movie Review: An alluring tale with a fabulous cast that leaves you in a conundrum தெரியாதென அமிர்தா அழுகிறாள். அது தற்செயலாக நிகழ்ந்த பயங்கர விபத்து என்கிறார் அன்ரூ. (சாட்சிகள் சாட்சியமளிக்கும்போது மற்றச் சாட்சிகள் அதைக் கேட்கக்கூடாது, ஆனால் எப்படியோ அமிர்தா அங்கிருக்கிறார்.)

இப்படியாக இலங்கைக்கு இனிய கனவுகளைச் சுமந்துகொண்டு, கேசவ்வுடன் வந்த அமிர்தா அதே வாகனத்தில் இலங்கையைவிட்டுத் தனியே கண்ணீருடன் வெளியேறும்போது, பொலிஸ் ஸ்ரேசனில் அவர் சொன்னதை அவர் நம்புகிறாரா என அன்ரூவிடம் கேட்கிறாள். அன்ரூ அமைதியாகவிருக்கிறார். அவர்கள் செல்லும் வாகனம் சீதா எலியக் கோவிலைக் கடந்துசெல்வதுடன் படம் நிறைவுறுகிறது.

ஆனால், அது பார்வையாளர்களின் மனதில் பல கேள்விகளை எழுப்பிவிடுகிறது. முக்கியமாக முடிவில் சீதா எலியக் கோவில் காட்டப்பட்டதன் காரணமென்ன? தற்செயலாக நடந்தது என்றால், கேசவ் இறந்தது அமிர்தாவுக்கு விடுதலை என்கிறதா? அல்லது அவள் குற்றம் செய்யவில்லை, அவள் புனிதமானவளென அவள் நிரூபிக்கவேண்டும் என்கிறதா? இல்லையென்றால், பிரச்சினைக்கான தீர்வைச் சீதை தானே கண்டதாக Jain version சொல்வதுபோல அவள் செயற்பட்டாளா? அவ்வளவு மோசமானவனா கேசவ்? அநியாயமாகக் அவனைக் கொன்றதற்கு அவள் பொறுப்பெடுக்க வேண்டாமா? வேறு யாரும் இறந்ததாகக் காட்டாமையால், மனித உயிர்களுக்குப் பெறுமதியில்லையா எனக் கேட்ட அமிர்தாவே இன்னொரு உயிரைப் பறிக்கலாமா? இவ்வாறாக ஒவ்வொருவரும் வேறுபட்ட interpretation கொள்ளும்வகையில் இந்தக் கதை அமைந்திருக்கிறது.

ஆங்கிலம், மலையாளம், தமிழ், சிங்களம், இந்தி என வெவ்வேறு மொழிகளில் உரையாடல்களைக் கொண்ட இந்தத் திரைப்படம், தமிழர், முஸ்லீம், சிங்களவர் என மூவினத்தவரையும் உள்ளடக்கும் கதாபாத்திரங்களை மட்டுமன்றி, இலங்கையிலிருக்கும் மூன்று மதங்களின் பிரதிநிதிகளையும்கூடக் காட்டியிருக்கிறது. அத்துடன் தமிழ், முஸ்லீம் மக்கள் பற்றிய சிங்கள மக்களின் வகைமாதிரியான பார்வைகளையும், காதல், சுயநலம், விரக்தி, இயலாமை, காழ்ப்புணர்வு, அதிர்ச்சி, ஆக்ரோஷம் போன்ற உணர்சிகளையும் இயல்பாகக் காட்டியுள்ளது. புளிக்கொய்யா விற்கும் பிள்ளைகளுடனான ஊடாட்டங்களை வேறுபட்ட விதங்களில் அமைத்திருப்பதன் மூலமும், வெவ்வேறு வகையான உணவுகளை இருவரும் உண்பதாகக் காட்டியதன் மூலமும்கூட, சூழலின் தாக்கத்தை இயக்குநர் கோடிட்டுக் காட்டியிருக்கிறார்.

திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனங்களும் காட்சிகளும், சூழலின் அழுத்தம் மனித உறவுகளில் ஏற்படுத்தும் உரசல்களை, அவர்களின் இயல்பான செயல்பாடுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை, எதிர்வினைகளை, இலங்கையிலுள்ள அரசியல் பிரச்சினைகளுடன் இணைத்துத் துல்லியமாகக் கூறியுள்ளன. இதிலுள்ள கதாபாத்திரங்கள் எவரையும் முற்றாக நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ சொல்லமுடியாது. அவர்கள் சராசரி மனிதர்கள். பிரச்சினைகளைக் கையாளும் விதங்கள் அவர்களின் நிலைக்கேற்ப வெவ்வேறாக இருக்கிறது.

எதிர்பாராத முடிவைக்கொண்ட இந்தப் படத்தைத் திரையரங்கில் ஒரு தடவையும் இணையத்தில் இன்னொரு தடவையும் பார்த்திருந்தேன். இரண்டாம் தடவையும் ஆர்வம்குன்றாமல் பார்க்கமுடிந்தது. ஆனால், ரொறன்ரோவில் ஓரிரு நாள்கள் மட்டும் திரையிடப்பட்டிருந்த இதனை நான் பார்த்தபோது இரண்டே இரண்டு பேர் மட்டுமே தியேட்டரிலிருந்தோம். அவ்வகையில் யதார்த்தமான கதையும், இயல்பான நடிப்பும் கொண்ட இந்தப் படத்துக்கான முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பது கவலையே.

Apichatpong Weerasethakul's 'The Fountains of Paradise' Aiming for 4-Hour Runtime — World of Reel

குறிப்பு: Jain versionஇன்படி சீதை இராவணனை கொன்றதாக இந்தப் படத்தில் சொல்லப்படுகிறது. ஆனால், Adbhuta Ramayana version இல் தான் அப்படிச் சொல்லப்படுகிறது. Jain version ராவணனை லட்சுமன் கொன்றதாகவே சொல்கிறது (https://www.tamilvu.org). எனவே ஒரு versionஇல் எனப் பொதுவாகக் கூறப்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.

நன்றி: ஞானம்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.