இந்தியா

இந்தியா லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள்

இந்தியா லடாக் யூனியன் பிரதேசத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என மத்திய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்

வளர்ச்சியடைந்த, வளமான லடாக்கை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், அங்கு சான்ஸ்கார், திராஸ், ஷாம், நுப்ரா, சாங்தாங் ஆகிய 5 மாவட்டங்களை புதிதாக உருவாக்க மத்திய உள்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புதிய மாவட்டங்களின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஆட்சி நிர்வாகத்தை வலுப்படுத்துவதன் மூலம், பொதுமக்களுக்கான நன்மைகள் அவர்களின் வீட்டுக்கே சென்றடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், லடாக் மக்களுக்கு அளப்பரிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *