இந்தியா

5 வருடங்களில் 18 ஆயிரத்து 179 குழந்தைகள் தத்தெடுப்பு: இந்திய மத்திய ஆணையம் தகவல்

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து 18 ஆயிரத்து 179 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள குழந்தை காப்பகங்களில் 420 சிறப்பு குழந்தைகள் தத்தெடுப்புக்காக காத்திருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை ஆரோக்கியமான குழந்தைகளை தத்தெடுப்பதிலும் போட்டி நிலவுகிறது.

2 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான குழந்தைகளில் 25 பேர் மட்டுமே தத்தெடுக்கப்படுவதற்கு காத்திருக்கின்றனர்.

உடலில் ஏதேனும் சிறு குறைபாடு இருந்தால்கூட அவ்வாறான சிறப்பு குழந்தைகளை தத்தெடுப்பதற்கு யாரும் முன்வருவதில்லை என தெரிய வந்துள்ளது.

அதேநேரம் வெளிநாடுகளில் தத்தெடுக்கப்படும் சிறப்பு குழந்தைகளுக்கு சலுகைகள் கொடுக்கப்படுவதாக ஆணையத்தின் முன்னாள் தலைவர் கூறியுள்ளார்.

அதிலும் தான் தலைவராக இருந்தபோது ஆண் குழந்தைகளை விடவும் பெண் குழந்தைகளே அதிகம் தத்தெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *