இந்தியா

“இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் நம்பிக்கை உள்ளது“: உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் தெரிவிப்பு

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

கொல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கை இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர் இந்திய மத்திய புலனாய்வுத் துறையினரின் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை உள்ளதென செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கூறியதாவது, “இந்த வழக்கின் ஆரம்பத்திலிருந்தே மாநில நிர்வாகமும் பொலிஸாரும் யாரோ ஒருவரைப் பாதுகாப்பதற்கு முயற்சி செய்கிறார்கள் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

அவர்கள் ஏதோவொன்றை மறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், தற்சமயம் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *