இந்தியா

மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து – 17 பேர் பலி: காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை

மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு. இந்தியா, ஆந்திர பிரதேசம், அனகாபள்ளி மாவட்டம், அச்சுதாபுரம் பகுதியில் மருந்து தொழிற்சாலையொன்று செயல்பட்டு வருகிறது.

வழக்கம்போல்  சுமார் 200க்கும் அதிகமானோர் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மதிய உணவு நேரத்தின்போது திடீரென தொழிற்சாலையிலிருந்த ரியாக்டர் வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

தொடர்ந்து அருகிலிருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பிடித்து எரிந்துள்ளன. இந்தத் தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களை ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று நேரில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *