இந்தியா

இந்தியப் பெண் கொலை சம்பவம்; தந்தையின் ஆதங்கம்

இந்தியாவின் கொல்கத்தா மாநிலத்தில் பெண் வைத்தியரின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் உண்மையான குற்றவாளி இல்லையெனவும் கொலைக்குப் பின்னால் மிகப்பெரிய கும்பல் இருப்பதாகவும் உயிரிழந்த வைத்தியரின் தந்தை ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி வைத்தியசாலையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் வைத்தியர் கடந்த 09 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆர்ஜி கர் மருத்துவமனையில் தனது மகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதாக குறித்த பெண் வைத்தியரின் தந்தை கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.

“கொலைக்கு பின்னால் மிகப்பெரிய கும்பல் இருக்கிறது. ஆர்ஜி கர் மருத்துவமனையில் எனது மகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார். பழிவாங்கும் நோக்கத்தோடு 04 ஆண் மருத்துவர்களோடு எனது மகளுக்கு சேவை வழங்கப்பட்டது.

கருத்தரங்கு கூடத்தில் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் கூறுகின்றனர். இதனை நம்ப முடியவில்லை. மருத்துவமனையின் வேறு பகுதியில் எனது மகளை துஷ்பிரயோகம் செய்து கொலை செய்துள்ளனர். கொலையில் பலருக்கு தொடர்பு உள்ளது” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *