“தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்”

புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளரான Anton Chekhovவிடம் ஒரு முறை “தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?” என்று கேட்கப்பட்டது.

அந்தக் கேள்விக்கு அவர் கீழ்வருமாறு பதிலளித்தார்.

“தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்திலிருப்பார்கள்.

அவ்வாறே, சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.
அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே போஷிக்கப்பட்டிருக்கும்.

எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளையெல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்திருக்கின்றனவோ, எந்த சமூகத்தில் அதன் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ, அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *