கவிதைகள்

எனது சிலுவை… கவிதை…கவிநிலா

எனது சிலுவையைச்
சுமப்பதற்கென்று…
ரொம்ப நாட்களாக
தேடிகொண்டிருக்கிறேன்…
இயேசு நாதரை…..!!

பேரன்பால் விரிந்த
கைகளில் மீண்டுமொரு முறை
அறைந்து விடுவதற்கென
செய்து வைத்திருக்கிறேன்
பாவக் கறை பல….படிந்த
முளையாணிகளை ….!!

என்ன செய்ய……

பாவம் போக்கிகளின்
மேடைகளில்….இன்னமும்
விற்பனைவிழா
விரைந்து நடப்பதால்….

எனது சுற்றிற்காக
காத்திருக்க சொன்னார்கள்….!!

ஏலச் சந்தையில்
எல்லோருக்கும் யூதாஸின் சாயல்….!!!

இயேசுவின் சாயல் கொண்டு
துரோகத்தை
கூவிக்கூவி விற்கையில் …

காலம் கடந்துமென் புலங்களில்
ஒலித்துக் கொண்டிருக்கிறது….

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *