சென்னை – யாழ்ப்பாணம் இடையில் செப்டம்பர் முதல் புதிய விமான சேவை

சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் இந்த விமான சேவை ஆரம்பமாகவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து நாள்தோறும் யாழ்ப்பாணத்திற்கு இந்த விமான சேவை இயக்கப்பட உள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.55 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3.10 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும் எனவும் இண்டிகோ ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தள்ளது.

இதேவேளை மாலை 3.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தை சென்றடையும். இந்த விமான சேவை, திங்கள், செவ்வாய், வியாழன், சனி என வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்பட உள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button